யாழில் ஸ்ரீகாந்தாவின் முக்கிய இரண்டு அதிரடி அறிவிப்புகள்!

17shares

ரெலோ அமைப்பிலிருந்து விலகுவதாக அந்த அமைப்பின் செயலாளராக இருந்த என் சிறீகாந்தா தெரிவித்துள்ளதுடன் புதிய தமிழ் இயக்கத்தை இருவார காலத்துக்குள் ஆரம்பிக்க உள்ளதாகவும் அறிவித்துள்ளார்.

இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்

கடந்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட சிவாஜிலிங்கத்துக்கு ஆதரவாக செயற்பட்ட காரணத்தால் ரெலோ இயக்கத்தின் செயலாளர் நாயகமாக உள்ள நான் உட்பட மூவர் அமைப்பிலிருந்து இடைநிறுத்தப்பட்டதாகவும் ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது என கேட்டு கடிதங்கள் அனுப்பப்பட்டன.

இவ்வாறு அனுப்பப்பட்டகடிதங்களுக்கு பதில் அனுப்புவதில்லை என நாங்கள் முடிவெடுத்துள்ளளோம். ஏனெனில் இலங்கை தமிழரசுக்கட்சியின் எடுபிடியாக தமிழரசு கட்சி இருவாரங்களுக்கு முன்னதாகவே கடந்த நவம்பர் மாதம் இரண்டாம் திகதி அவசரம் அவசரமாக தமது மத்திய செயற்குழு கூட்டத்தை வவுனியாவில் நடத்தி புதிய ஜனநாயக முன்னணி வேட்பாளர் சஜித்துக்கு ஆதரவளிப்பதாக தெரிவித்ததை அடுத்து அதே முடிவுக்கு நான்கு நாட்களுக்கு பின்னர் ரெலோ குழுவின் தலைமை குழு கூட்டத்தில் என்னைப்போன்றவர்களின் எதிர்ப்பு ஆட்சேபனைகளையும் மீறி பெரும்பான்மை அடிப்படையில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது என அவர் மேலும் தெரிவித்தார்.

இன்றைய ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் தெரிவித்த கருத்துக்கள் காணொலி வடிவில்.

இதையும் தவறாமல் படிங்க
உலகுக்கு விடுக்கப்பட்டது “கறுப்புச்சாவு” அச்சுறுத்தல்! சீனாவில் மீண்டும் பிளேக் பயங்கரம்

உலகுக்கு விடுக்கப்பட்டது “கறுப்புச்சாவு” அச்சுறுத்தல்! சீனாவில் மீண்டும் பிளேக் பயங்கரம்

கடைசி நேரத்தில் விடுதலைப்புலிகளின் தளபதிகள் கூறியதாக காலம் கடந்து வெளியான தகவல்!

கடைசி நேரத்தில் விடுதலைப்புலிகளின் தளபதிகள் கூறியதாக காலம் கடந்து வெளியான தகவல்!

அத்துமீறினால் தாக்கி அழிப்போம்: அமெரிக்காவை எச்சரித்துள்ள சீனா!

அத்துமீறினால் தாக்கி அழிப்போம்: அமெரிக்காவை எச்சரித்துள்ள சீனா!