சஜித்துக்கு வெட்டு : எதிர்க்கட்சித்தலைவராகிறார் கருஜெயசூரிய?

50shares

சபாநாயகர் கரு ஜெயசூரியாவை எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்க ஐக்கிய தேசியக் கட்சி (யுஎன்பி) தலைவர் ரணில் விக்கிரமசிங்க விருப்பத்தை தெரிவித்துள்ளதாக ஐக்கியதேசிய கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

இது தொடர்பாக ஐக்கிய தேசிய கட்சி துணைத் தலைவர் சஜித் பிரேமதாச, கட்சித் தலைவருக்கும் சபாநாயகருக்கும் இடையில் நடைபெற்ற இரண்டு கூட்டங்களில் கலந்து கொள்ளத் தவறியதை அடுத்து சபாநாயகரை எதிர்க்கட்சித்தலைவராக நியமிக்க ரணில் முடிவெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஜெயசூரியாவை எதிர்க்கட்சித் தலைவராக நியமித்தால் அவர் தற்போது வகிக்கும் சபாநாயகர் பதவியில் இருந்து ராஜினாமா செய்ய வேண்டியிருக்கும்.

ஒரு இளம் தலைமைக் குழுவை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் சபாநாயகர் ஜெயசூரியாவை எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்க ரணில் ஒப்புக் கொண்டதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

கடந்த மாதம் தனது சகோதரர் கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக நியமிக்கப்பட்ட பின்னர் எதிர்க்கட்சித் தலைவர் பதவி வெற்றிடமாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க
உலகுக்கு விடுக்கப்பட்டது “கறுப்புச்சாவு” அச்சுறுத்தல்! சீனாவில் மீண்டும் பிளேக் பயங்கரம்

உலகுக்கு விடுக்கப்பட்டது “கறுப்புச்சாவு” அச்சுறுத்தல்! சீனாவில் மீண்டும் பிளேக் பயங்கரம்

கடைசி நேரத்தில் விடுதலைப்புலிகளின் தளபதிகள் கூறியதாக காலம் கடந்து வெளியான தகவல்!

கடைசி நேரத்தில் விடுதலைப்புலிகளின் தளபதிகள் கூறியதாக காலம் கடந்து வெளியான தகவல்!

அத்துமீறினால் தாக்கி அழிப்போம்: அமெரிக்காவை எச்சரித்துள்ள சீனா!

அத்துமீறினால் தாக்கி அழிப்போம்: அமெரிக்காவை எச்சரித்துள்ள சீனா!