காரைதீவு பிரதேசத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு நேரில் சென்ற கோடீஸ்வரன்!

5shares

அம்பாறை மாவட்டத்தில் காரைதீவு பிரதேசத்தில் வெள்ளம் பாதித்த பல பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்டார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன்.

காரைதீவு பிரதேசத்துக்கு இன்று காலை விஜயம் செய்த கோடீஸ்வரனுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் க.பிரகாஷ், கல்முனை மாநகரசபை உறுப்பினர் ராஜன் மற்றும் ஆதரவாளர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

காரைதீவின் பல வீதிகளையும் பார்வையிட்டு, மக்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளையும் நேரில் ஆராய்ந்த நாடாளுமன்ற உறுப்பினர், மக்கள் இயல்பு வாழ்வுக்குத் திரும்புவதற்கு ஏற்ற ஒழுங்குகளை மேற்கொள்ளுமாறு காரைதீவு பிரதேசசபைத் தவிசாளர் ஜெயசிறிலுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வேண்டிக் கொண்டார். தானும் தன்னாலான உதவிகளை மேற்கொள்வதாகவும் அவர் மக்களிடம் தெரிவித்தார்.

இதையும் தவறாமல் படிங்க
loading...