ஜனாதிபதி தேர்தலுக்குப் பின் முதன் முறையாக மைத்திரி வெளியிட்ட விசேட பதிவு!

12shares

நவம்பர் மாதம் 16ஆம் திகதி நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலுக்குப் பின் 17ஆம் திகதி புதிய ஜனாதிபதிக்கு வாழ்த்து தெரிவித்து முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன டுவிட்டரில் பதிவிட்டிருந்தார்.

அதன் பின் அரசியலில் பல அதிரடி மாற்றங்கள் ஏற்பட்டிருந்த போதும் ஒன்று பேசாத மைத்திரி இன்று டுவிட்டரில் விசேட கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார்.

இன்று நாடளாவிய ரீதியில் கல்விப் பொது தராதர சாதாரண தர பரீட்சை ஆரம்பமாகி உள்ளது.

இதில் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு முன்னாள் ஜனாதிபதி வாழ்த்து தெரிவித்து இந்த பதவிட்டுள்ளார்.

இன்று பரீட்சை எழுதும் அனைத்து மாணவர்களுக்கும் பரீட்சையில் வெற்றி பெறுவதற்கான சக்தியும் தைரியமும் வேண்டும் என பிரார்த்திப்பதோடு தமது ஆசியையும் வழங்குவதாக பதிவிட்டுள்ளார்.


இதையும் தவறாமல் படிங்க
loading...