19 ஆவது திருத்தச்சட்டத்தை ஒழிக்க ஆதரவு வழங்கப்படமாட்டாது!

9shares

19 ஆவது திருத்த சட்டத்தை முழுமையாக மாற்றியமைப்பதற்கு ஒருபோதும் ஆதரவு வழங்கப்படமாட்டாது என ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக கட்சின் சிரேஷ்ட உறுப்பினர் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல இகன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்

19 வது திருத்தம் முன்னாள் அரசாங்கத்தால் தாக்கல் செய்யப்பட்டு இறுதியில் நிறைவேற்றப்பட்டபோது நாடாளுமன்றத்தின் ஆதரவைப் பெற்றது.

திருத்தம் செய்ய வேண்டிய சில உட்பிரிவுகள் இருப்பதாக தற்போதைய அரசு உணர்ந்தால், திருத்தங்களை மேற்கொள்ள அரசாங்கத்துடன் கலந்துரையாட ஐக்கிய தேசிய கட்சி தயாராகவே உள்ளது என்று அவர் கூறினார்.

எனினும், 19 ஆவது திருத்தத்தை முற்றிலுமாக ஒழிப்பதற்கு ஐக்கிய தேசிய கட்சி ஆதரவளிப்பது சாத்தியமில்லை என்று அவர் மேலும் கூறினார்.

அண்மையில் இந்து பத்திரிகைக்கு பேட்டியளித்த ஜனாதிபதி னோட்டாபய ராஜபக்ச, நாடாளுமன்றில் தனக்கு பெரும்பான்மை கிடைத்தால் 19 ஆவது திருத்த சட்டத்தை இரத்து செய்வேன் என தெரிவித்திருந்தார்.

இதையும் தவறாமல் படிங்க
loading...