பலத்த மழையால் நிரம்பும் நிலையில் இரணைமடுக்குளம்!

16shares

தற்போது ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றத்தினால் கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள பல குளங்கள் நிரம்பும் தருவாயில் காணப்படுகின்றது.

குறிப்பாக இரணைமடுக்குளம் 24.11 அடியாகவும், அக்கராயன் குளம் 15.11 அடியாகவும், கனகாம்பிகை குளம் 10.2 அடியாகவும், கல்மடு குளம் 23.2 அடியாகவும், நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

தற்போது மூன்று சிறிய குளங்கள் பிரமந்தனாறு குளம் 6 அங்குலமாகவும், வன்னேரிக்குளம் 3 அங்குலமாகவும், குடமுருட்டி குளம் 3 அங்குலமாகவும் வான் பாய்ந்து கொண்டிருக்கிறது.

தற்போது கனகாம்பிகை குளம் மற்றும் கல்மடு குளம் வான் பாய உள்ளதால் கலிங்கு நீர் பாய்ந்தோடும் பிரதேசங்களில் வாழும் மக்கள் அவதானமாக இருக்கும்படி அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இதையும் தவறாமல் படிங்க
loading...