முதியோர் இல்லத்திற்கு கிடைத்த நன்மை!

15shares

மன்னார் மாவட்ட ஓய்வூதியம் பெறுவோர் சங்கத்தின் ஏற்பாட்டில் 2019 ஆண்டு பாலன் பிறப்பு மற்றும் 2020 ஆங்கில புது வருடத்தினை முன்னிட்டு மன்னார் பட்டித்தோட்டம் முதியோர் இல்லத்தின் வசிக்கும் முதியோர்களுக்கு தேவையான நிவாரண பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.

ஓய்வூதியம் பெறுவோர் சங்கத்தினால் சேகரிக்கப்பட்ட ஒரு தொகை பணத்தின் ஊடாக குறித்த முதியோர் இல்லத்தின் ஊடாக பயன் பெறும் முதியோர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் கையளிக்கப்பட்டுள்ளன

குறித்த நிகழ்வில் மன்னார் மாவட்ட ஓய்வூதியம் பெறுவோர் சங்க தலைவர் செயலாளர் உட்பட அங்கத்தவர்கள் மற்றும் பட்டித்தோட்டம் முதியோர் இல்ல பொறுப்பாளார் அருட்சகோதரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதையும் தவறாமல் படிங்க
loading...