ஸ்ரீலங்கா ஜனாதிபதியுடன் கைகோர்க்கும் வெளிநாட்டு முக்கியஸ்தர்கள்!

13shares

ஸ்ரீலங்கா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவினால் புதிய நோக்குடன் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களுக்கு உயரிய ஒத்துழைப்பினை பெற்றுத்தருவதாக இத்தாலி மற்றும் நோர்வே தூதுவர்கள் உறுதியளித்துள்ளனர்.

இரண்டு நாடுகளின் தூதுவர்களுடனான சந்திப்பின் பின்னர் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள ஜனாதிபதி ஊடகப் பிரிவு இந்த தகவலை தெரிவித்துள்ளது.

ஸ்ரீலங்காவிற்கான இத்தாலி தூதுவர் ரீட்டா ஜி. மெனல்லா இன்று (02) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் மேன்மைதங்கிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்தார்.

புதிதாக பதவியேற்ற ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு இத்தாலி அரசாங்கத்தின் சார்பில் வாழ்த்து தெரிவித்த இத்தாலி தூதுவர் புதிய நோக்குடன் முன்னோக்கி பயணிக்கும் ஸ்ரீலங்காவுடன் பரந்த ஒத்துழைப்புடன் செயற்பட தமது அரசாங்கம் எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.

கோட்டாபய ராஜபக்ஷவின் புதிய வேலைத்திட்டத்துடன் பொருளாதாரம் சமூகம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் ஸ்ரீலங்கா துரிதமாக முன்னோக்கிப் பயணிக்கும் என நம்பிக்கை வெளியிட்ட தூதுவர் அவற்றை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு உயரிய ஒத்துழைப்பை பெற்றுத் தருவதாகவும் தெரிவித்தார்.

இதனிடையே ஸ்ரீலங்காவிற்கான நோர்வே தூதுவர் ரைனி ஜொரன்லி எஸ்கேடல் உள்ளிட்ட தூதுக் குழுவினர் இன்று (02) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்தனர்.

இதன்போது ஜனாதிபதிக்கு வாழ்த்துக்களை தெரிவித்த நோர்வே தூதுவர் உள்ளிட்ட தூதுக் குழுவினர் புதிய நோக்குடனும் வலுவான பின்னணியுடனும் முன்னெடுக்கப்படும் ஜனாதிபதியின் வேலைத்திட்டங்களுக்கு தமது அரசாங்கம் உயரிய ஒத்துழைப்பினை பெற்றுத் தருமென கூறியுள்ளனர்.

இதேவேளை ஸ்ரீலங்காவிற்கான கனேடிய உயர் ஸ்தானிகர் டேவிட் மெக்கினோன் இன்று (02) முற்பகல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவை சந்தித்துள்ளார்.

ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில் ஜனாதிபதியுடன் உயர் ஸ்தானிகருடன் சுமூகமாக கலந்துரையாடியுள்ளார். கனடா அரசாங்கத்தின் சார்பில் தனது வாழ்த்துக்களை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிற்கு உயர் ஸ்தானிகர் தெரிவித்தார்.

அதேவேளை சீன மக்கள் குடியரசின் அரச பேரவையின் விசேட பிரதிநிதியும் சீன வெளிவிவகார அமைச்சின் ஆசிய பிராந்தியத்திற்கான பணிப்பாளர் நாயகமுமான ஸ்ரீலங்காவிற்கான முன்னாள் சீன தூதுவர் வூ ஜியாங்கோவை சந்தித்துள்ளார்.

ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வூ ஜியாங்கோவை சந்தித்து கலந்துரையாடியதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறியுள்ளது.

ஸ்ரீலங்காவிற்கு விஜயம் செய்துள்ள ஷா மொஹமட் குரேஷி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இன்று நாடு திரும்பவுள்ள நிலையில் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து கோட்டாபய ராஜபக்ஸவை பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இதையும் தவறாமல் படிங்க
loading...