ரணில் மீது பிழை இல்லை; கத்துபவர்களுக்கு பதிலளிக்கப் போவதில்லை - ரஞ்சன் ராமநாயக்க!

7shares

அன்னம் சின்னத்தில் போட்டியிட்ட புதிய ஜனநாயக முன்னணியின் தோல்விக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவே காரணம் என சஜித் பிறேமதாசவும், அவரது விசுவாசிகளும் குற்றம்சாட்டி வருகின்றனர்.

ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்ட சஜித்பிரேமதாசவுக்கு ரணில் முழுமையான ஒத்துழைப்பினை வழங்கவில்லையென்றும் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றது.

இந்நிலையில் இந்தக் குற்றச்சாட்டுக்களை ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க நிராகரிக்கின்றார்.

இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில்...

நான் அதை நம்பவில்லை. ஏனென்றால் ரணில் விக்ரமசிங்கவே 2010 ஆம் ஆண்டு ஜனாதிபதியாக சரத் பொன்சேகாவிற்கும், 2015ஆம் ஆண்டு ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேனவிற்கு முழு ஒத்துழைப்பினையும் வழங்கினார்.

இவ்வாறான நிலையில் இந்த 2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற தேர்தலில் வேட்பாளரான சஜித் பிரேமதாசவுக்கும் ரணில் விக்ரமசிங்க முழு ஒத்துழைப்பினையும் வழங்கினார்.

சாதாரணமாக தேர்தலில் தோல்வியடைந்ததும் ரணில் விக்ரமசிங்க மீது பழி சுமத்துகின்றனர். அதேபோல சிலர் அந்த தோல்வியை மங்கள சமரவீர மீதும், பிணைமுறி மோசடி மீதும், சஹ்ரானின் தாக்குதல் மீதும் தள்ள முயற்சிக்கின்றனர்.

எனினும் இவ்வாறு கத்துபவர்களுக்கு நாம் பதிலளிக்கப் போவதில்லை. அதேவேளை நாம் புதிய அரசாங்கத்திற்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். நாம் புதிய அரசாங்கத்தை கால்களால் இழுக்கப் போவதில்லை. என்றார்.

இதையும் தவறாமல் படிங்க
loading...