கனடா செல்லத் தயாரான ஈழத்துப் பெண்ணுக்கு நடந்த விபரீதம்! தவிக்கும் உறவுகள்

58shares

வவுனியா ஓமந்தையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு முச்சக்கர வண்டி – வான் விபத்தில் கனடா செல்ல தயாராகிய தகவலை உறவினருக்கு சொல்லிவிட்டு திரும்பி வந்த பெண் விபத்தில் உயிரிழந்துள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த வெள்ளிக்கிழமை 29ஆம் திகதி கிளிநொச்சியிலுள்ள உறவினர்களுக்கு “கனடாவிற்கு செல்வதற்கு விசா கிடைத்துவிட்டது. டிசம்பர் 2ஆம் திகதி கனடாவிற்கு செல்லவுள்ளதாக” தகவல் தெரிவித்துவிட்டு வவுனியா குட்சைட் வீதியிலுள்ள வீட்டிற்கு தனது கணவருடன் முச்சக்கரவண்டியில் அவர் சென்று கொண்டிருந்தார்.

இரவு ஓமந்தை – விளக்குவைத்தகுளம் பகுதியில் வீதியில் படுத்திருந்த மாடு ஒன்றுடன் எதிரே வந்த வான் ஒன்று மோதி நிலை தடுமாறிய வான் குறித்த பெண்மணியும் அவரது கணவனும் சென்ற முச்சக்கரவண்டியுடன் மோதியது.

இதன்போது கனடாவிற்கு செல்லத் தயாராகிய இரமணிசுந்தர் இராஜசுலோசனா (வயது 62) படுகாயமடைந்து உயிரிழந்துள்ளார். இவரது கணவர் காயமடைந்து சிகிச்சைபெற்று வருகின்றார்.

இதையும் தவறாமல் படிங்க
முகக்கவசம் அணிவது தொடர்பில் கொள்கையை மாற்றிய உலக சுகாதார ஸ்தாபனம்

முகக்கவசம் அணிவது தொடர்பில் கொள்கையை மாற்றிய உலக சுகாதார ஸ்தாபனம்

கட்டுநாயக்க மற்றும் மத்தள விமானநிலையங்கள் திறக்கப்படும் திகதி அறிவிப்பு

கட்டுநாயக்க மற்றும் மத்தள விமானநிலையங்கள் திறக்கப்படும் திகதி அறிவிப்பு

கருணாவுக்கு 35 அடி உயரத்தில் பிரம்மாண்டமான பதாதைகள்

கருணாவுக்கு 35 அடி உயரத்தில் பிரம்மாண்டமான பதாதைகள்