வடக்கு கிழக்கு உட்பட நாடளாவிய ரீதியில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

4shares

நாடளாவிய ரீதியில் தற்போது தொடரும் சீரற்ற வானிலை காரணமாக இன்றைய தினமும் மழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, வடக்கு, கிழக்கு, வடகிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலேயே இவ்வாறு கனமழை பெய்வதற்கான சாத்தியம் இருப்பதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மட்டக்களப்பு, அம்பாறை, முல்லைத்தீவு, நுவரெலியா, பதுளை மற்றும் மொனராகலை மாவட்டங்களில் 100 தொடக்கம் 150 மில்லிமீற்றர் வரையில் மழைவீழ்ச்சி பதிவாகக்கூடுமெனவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

எனவே மழைகாலத்தில் இடம்பெறும் இடி, மின்னல் தாக்கம் மற்றும் வெள்ளப்பெருக்கு போன்றவற்றில் இருந்து மக்கள் அவதானமாக இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதையும் தவறாமல் படிங்க
loading...