யாழ்ப்பாண இளைஞர்கள் கட்டுநாயக்க விமானநிலையத்தில் கைது!

9shares

அல்பேனியாவுக்கு செல்லமுயன்ற யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் கட்டுநாயக்க விமானநிலையத்தில் குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்தைச்சேர்ந்த 21,30 வயதுடைய இளைஞர்களே கைது செய்யப்பட்டவர்களாவர்.

இவர்கள் இருவரும் மீன் ஏற்றுமதி நிறுவனம் ஒன்றில் பணிபுரிபவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

போலி வீசாவை சமர்ப்பித்து ஈரானிய எல்லைகளின் ஊடாக ஐரோப்பிய நாடான அல்பேனியாவிற்கு செல்ல இவர்கள் முயற்சித்துள்ளனர்.

நேற்று முன்தினமிரவு ஓமானின் மஸ்கட் நகரிலிருந்து ஈரானின் தெஹ்ரான் நகருக்கு செல்வதற்காக இரண்டு விமான பயணச் சீட்டுக்களை கொள்வனவு செய்வதற்காக கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தபோதே அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட இருவரையும் குற்றப் புலனாய்வு பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதையும் தவறாமல் படிங்க
கட்டுநாயக்க மற்றும் மத்தள விமானநிலையங்கள் திறக்கப்படும் திகதி அறிவிப்பு

கட்டுநாயக்க மற்றும் மத்தள விமானநிலையங்கள் திறக்கப்படும் திகதி அறிவிப்பு

முகக்கவசம் அணிவது தொடர்பில் கொள்கையை மாற்றிய உலக சுகாதார ஸ்தாபனம்

முகக்கவசம் அணிவது தொடர்பில் கொள்கையை மாற்றிய உலக சுகாதார ஸ்தாபனம்

அடிமேல் அடி.. நிலைகுலைந்த ட்ரம்ப்! அமெரிக்காவில் இராணுவப் புரட்சியா? முற்றியது மோதல்

அடிமேல் அடி.. நிலைகுலைந்த ட்ரம்ப்! அமெரிக்காவில் இராணுவப் புரட்சியா? முற்றியது மோதல்