முடிவுக்கு வந்தது படை அதிகாரியின் உண்ணாவிரத போராட்டம் !

7shares

கொழும்பிலுள்ள சுவிஸ் தூதரகத்தில் பணியாற்றும் பெண் பணியாளர் கடத்தப்பட்டமை தொடர்பாக , குறித்த பெண், பொலிஸார் முன்னிலையில் வாக்குமூலம் அளிக்க வேண்டுமெனத் தெரிவித்து ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரி ஒருவர் மேற்கொண்டு வந்த உண்ணாவிரத போராட்டம் நிறைவுக்கு வந்துள்ளது.

கொழும்பிலுள்ள சுவிட்சர்லாந்து தூதரகத்திற்கு முன்னால் தாய்நாட்டுக்கான இராணுவம் என்ற அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஓய்வு பெற்ற மேஜர் அஜித் பிரசன்ன உண்ணாவிரத போராட்டத்தை மேற் கொண்டுவந்தார்.

இந்தநிலையில் அவர் நேற்றிரவு தனது உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அவரிடம் அதுரலிய ரத்ன தேரர் மற்றும் ஓய்வு பெற்ற ரியர் அட்மிரல் சரத் வீரசேகர விடுத்த கோரிக்கைக்கு அமையவே அவர் தனது உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இதையும் தவறாமல் படிங்க
கட்டுநாயக்க மற்றும் மத்தள விமானநிலையங்கள் திறக்கப்படும் திகதி அறிவிப்பு

கட்டுநாயக்க மற்றும் மத்தள விமானநிலையங்கள் திறக்கப்படும் திகதி அறிவிப்பு

முகக்கவசம் அணிவது தொடர்பில் கொள்கையை மாற்றிய உலக சுகாதார ஸ்தாபனம்

முகக்கவசம் அணிவது தொடர்பில் கொள்கையை மாற்றிய உலக சுகாதார ஸ்தாபனம்

அடிமேல் அடி.. நிலைகுலைந்த ட்ரம்ப்! அமெரிக்காவில் இராணுவப் புரட்சியா? முற்றியது மோதல்

அடிமேல் அடி.. நிலைகுலைந்த ட்ரம்ப்! அமெரிக்காவில் இராணுவப் புரட்சியா? முற்றியது மோதல்