உயிர்த்தஞாயிறு தாக்குதல் : கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகையின் அபிலாசை என்ன?

7shares

உயிர்த்தஞாயிறு தாக்குதலுக்கான காரணத்தை சரியாக இணங்கண்டு, அதற்கு பொறுப்புக்கூற வேண்டியவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டுமெனவும் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையின் அபிலாஷையும் அதுவே எனவும் ஜனாதிபதி கோட்டாபய தெரிவித்துள்ளார்.

கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் நேற்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்த வேளையே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது, விசாரணை ஆணைக்குழுவின் செயற்பணிகள் மற்றும் ஒழுங்கமைப்பினை ஆணைக்குழுவின் தலைவர் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் ஜானக்க டி சில்வா ஜனாதிபதிக்கு தெளிவுபடுத்தினார்.

அத்துடன் இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் தொடர்பிலும் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.

தாக்குதல் ஒன்று நடாத்தப்படுமென முன்கூட்டியே கிடைக்கப்பெற்ற தகவல்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய கவனத்திற் கொள்ளவில்லை என்றும் ஆணைக்குழுவின் தலைவர் இதன்போது தெரிவித்துள்ளார்.

இதனை மறைப்பதற்காக சில அதிகாரிகள் போலியான ஆவணங்களை தயாரித்துள்ளதாக சந்தேகம் ஏற்படுவதாகவும் நீதியரசர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்குப் பதிலளித்த ஜனாதிபதி, கடந்த ஆட்சிக் காலத்தில் தேசிய பாதுகாப்புதொடர்பில் பாரதூரமான வகையில் சிந்தித்து செயற்படாமையினால் புலனாய்வுத்துறை வீழ்ச்சியடைந்துள்ளதென்பதை சுட்டிக்காட்டியதுடன் அதன் பெறுபேறாக இஸ்லாமிய அடிப்படைவாதம் பிரசாரம் செய்யப்படுவதை தடை செய்ய முடியாதுள்ளதெனத் தெரிவித்துள்ளார்.

இதையும் தவறாமல் படிங்க
கட்டுநாயக்க மற்றும் மத்தள விமானநிலையங்கள் திறக்கப்படும் திகதி அறிவிப்பு

கட்டுநாயக்க மற்றும் மத்தள விமானநிலையங்கள் திறக்கப்படும் திகதி அறிவிப்பு

முகக்கவசம் அணிவது தொடர்பில் கொள்கையை மாற்றிய உலக சுகாதார ஸ்தாபனம்

முகக்கவசம் அணிவது தொடர்பில் கொள்கையை மாற்றிய உலக சுகாதார ஸ்தாபனம்

அடிமேல் அடி.. நிலைகுலைந்த ட்ரம்ப்! அமெரிக்காவில் இராணுவப் புரட்சியா? முற்றியது மோதல்

அடிமேல் அடி.. நிலைகுலைந்த ட்ரம்ப்! அமெரிக்காவில் இராணுவப் புரட்சியா? முற்றியது மோதல்