குருநகர் கடற்கரையில் இன்றையதினம் இராணுவத்தினர் செய்த செயல்!

19shares

நாடுபூராகவும் டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் யாழ். மாவட்ட படைகளின் கட்டளைத் தளபதியின் வழிகாட்டலின் கீழ் யாழ்ப்பாணம் குருநகர் கடற்கரை பகுதி சுத்தமாக்கும் பணி இன்றைய தினம் இடம்பெற்றது .

யாழ்ப்பாண மாவட்ட செயலக அனர்த்த முகாமைத்துவப் பிரிவின் அனுசரணையுடன் இடம்பெற்ற குறித்த சுத்தமாக்கும் பணியில் சுமார் 600க்கும் மேற்பட்ட இராணுவத்தினர் மற்றும் யாழ் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் யாழ்ப்பாண பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட கிராம சேவையாளர்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ பிரிவு அலுவலர்கள் கலந்து கொண்டு குருநகர் பகுதியில் கடற்கரை பகுதியில் சுத்தம் செய்தனர்.

குறித்த சுத்தம் செய்யும் பணிகள் மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவான் வணிகசூரிய மற்றும் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ஆகியோர் மருத்துவமனையில் கலந்து கொண்டிருந்த குறித்த சுத்தமாக்கும் பணியின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த யாழ் மாவட்ட அரசாங்க அதிபர், இவ்வாறு சுத்தம் செய்யும் இடங்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு மக்களிடமே உள்ளது.

எனவே இனிவரும் காலங்களில் மக்கள் குப்பைகளை கடற்கரையோரங்களில் கொட்டாது அதனை உரிய முறையில் அகற்ற முன்வரவேண்டும் என தெரிவித்தார்.

இதையும் தவறாமல் படிங்க
நடுவீதியில் வைத்து இளைஞன் மீது வாள்வெட்டு - யாழில் சம்பவம்

நடுவீதியில் வைத்து இளைஞன் மீது வாள்வெட்டு - யாழில் சம்பவம்

கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் தமிழ் கட்சிகள் ஒன்று திரண்டு உணவு ஒறுப்புப் போராட்டம்! நேரலையில்..

கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் தமிழ் கட்சிகள் ஒன்று திரண்டு உணவு ஒறுப்புப் போராட்டம்! நேரலையில்..

மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தம் - கல்வியமைச்சின் விசேட அறிவித்தல்

மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தம் - கல்வியமைச்சின் விசேட அறிவித்தல்