யாழ்.மாநகரசபை எல்லைப்பகுதியில் விதிக்கப்படவுள்ளதடை!

15shares

யாழ்ப்பாண மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் பண்டிகைக் காலத்தின் போது நடைபாதை வியாபாரத்தை தடை செய்வதற்கான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்தார்

யாழ்ப்பாண வணிகர் கழக பிரதிநிதிகளுக்கும் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா , எம் ஏ சுமந்திரன் மற்றும் மாநகரசபை முதல்வர் இமானுவேல் ஆனோல்ட் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று இன்றைய தினம் யாழ் வணிகர் கழக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. குறித்த சந்திப்பின் போது யாழ் நகர வர்த்தகர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் தெரிவிக்கப்பட்டது அதிலும் யாழ்ப்பாண மாநகர சபைக்கும் வர்த்தக சங்கத்திற்கும் இடையே காணப்படும் முரண்பாடு நிலைமைகள் தொடர்பில் பேசப்பட்டது,

முக்கியமாக இரண்டு விடயங்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது நீண்டகாலமாக யாழ்ப்பாண மாநகர சபைக்கு சொந்தமான நவீன சந்தை அங்காடியில் உள்ள கடைஉரிமையாளர்களின் பெயர் மாற்றம் தொடர்பாக அனைவராலும் பேசப்பட்டு வரும் நிலையிலும் இன்றுவரை அதற்கு ஒரு முடிவு எடுக்கப்படவில்லை என்ற விடயம் சுட்டிக்காட்டப்பட்டது.

இதற்கு பதிலளித்த எம் ஏ சுமந்திரன் இது தொடர்பில் மாநகர முதல்வரினால் குறித்த திட்டமானது முன்னெடுக்கப்பட்டுள்ளது. எனினும் அது ஆளுநரின் கையொப்பத்திற்காக கிடப்பில் கிடக்கின்றது எனவே புதிய ஆளுநர் வருகை தந்தவுடன் அதற்குரிய வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படும் என தெரிவித்தார்.

அத்துடன் பண்டிகை காலங்களில் நடைபாதை வியாபாரத்தை நிறுத்துமாறும் தமக்கு அந்த வியாபாரத்தால் பல நஷ்டங்கள் ஏற்படுவதாகவும் வர்த்தகர்களினால் சுட்டிக்காட்டப்பட்டது.. அந்த விடயம் தொடர்பான பிரேரணை ஒன்றினை மாநகரசபையில் முதல்வர் தான் கொண்டு வர உள்ளதாகவும் அந்த பிரேரணை நிறைவேற்றப்பட்ட பின்னர் எதிர்வரும் பண்டிகை காலங்களில் நடைபாதை வியாபாரத்திற்கு தடை ஏற்படுத்த உள்ளதாகவும் சுமந்திரன் தெரிவித்தார்.

குறித்த சந்திப்பின் போது உரையாற்றினர் வணிகர் கழகத்தின் தலைவர் ஜெனக்குமார்,யாழ்ப்பாண மாநகர முதல்வர் தொடர்பான பல்வேறுபட்ட குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

அதற்கு பதிலளித்த யாழ்ப்பாண மாநகர முதல்வர் எதிர்வரும் காலத்தில் யாழ்ப்பாண நகரை அண்டிய பகுதிகளில் மேற்கொள்ளப்படவுள்ள நடவடிக்கைகளின் போது யாழ்ப்பாண வர்த்தகர்களின் அனுசரணையோடு அவற்றை முன்னெடுக்கவுள்ளதாக உறுதியளித்தார்.

இதையும் தவறாமல் படிங்க
உலகுக்கு விடுக்கப்பட்டது “கறுப்புச்சாவு” அச்சுறுத்தல்! சீனாவில் மீண்டும் பிளேக் பயங்கரம்

உலகுக்கு விடுக்கப்பட்டது “கறுப்புச்சாவு” அச்சுறுத்தல்! சீனாவில் மீண்டும் பிளேக் பயங்கரம்

கடைசி நேரத்தில் விடுதலைப்புலிகளின் தளபதிகள் கூறியதாக காலம் கடந்து வெளியான தகவல்!

கடைசி நேரத்தில் விடுதலைப்புலிகளின் தளபதிகள் கூறியதாக காலம் கடந்து வெளியான தகவல்!

அத்துமீறினால் தாக்கி அழிப்போம்: அமெரிக்காவை எச்சரித்துள்ள சீனா!

அத்துமீறினால் தாக்கி அழிப்போம்: அமெரிக்காவை எச்சரித்துள்ள சீனா!