வம்புக்கு இழுத்தவருக்கு தக்க பதிலடி கொடுத்த மனோ கணேசன்

37shares

முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் தமது கருத்துக்களை சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றமை அனைவரும் அறிந்ததே.

அரசியல் சார்ந்த விடயமானாலும், சமூகம் சார்ந்த விடயமானாலும் அவர் பகிரங்கமாக பதிவிடுவார்.

இந்த நிலையில் “உங்களுடைய அனைத்து பதிவுகளும் விலங்கிகொல்வதற்கு மிகவும் கடினம். தயவு செய்து உங்கள் கருத்துக்களை முறையாக பதிவிடுங்கள்.” என ஒருவர் வம்புக்கு இழுத்துள்ளார்.

இதைக்கண்டு ஆத்திரமடைந்த மனோ,

“நான் என் தமிழை முறையாக பேசி எழுதுவதால்தான் உங்களால் விளங்கிக்கொள்ள முடியவில்லை என எண்ணுகிறேன். இனிமேல் எனக்கு என் தாய்மொழி தமிழை புதிதாக கற்க முடியாது. விளங்காவிட்டால் விட்டு விடுங்கள். என்னை தொடராதீர்கள். நன்றி. (உங்கள் பதிவில் இரு தமிழ் எழுத்து பிழைகள் உள. திருத்திக்கொள்க!)” என பதிலடி கொடுத்துள்ளார்.


you may like this

இதையும் தவறாமல் படிங்க