கடற்கரை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சிக்கிய 6 பேர்!

14shares

சட்ட விரோதமாக பிடிக்கப்பட்ட கடல் அட்டைகளுடன் 6 பேரை கடற்படை இன்று செவ்வாய்க்கிழமை கைது செய்துள்ளது.

மன்னார் சிலாவத்துறை கடற்கரை பகுதியில் நாடத்தப்பட்ட சோதனையின் போது சட்ட விரோதமாக பிடிக்கப்பட்ட கடல் அட்டைகளுடன் 6 நபர்கள் கடற்படையால் கைது செய்யப்பட்டனர்.

சிலாவத்துறையில் உள்ள கடற்கரை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது ​​சந்தேகத்திற்கிடமான படகு பரிசோதிக்கப்பட்டது. இதன் போது 977 கடல் அட்டைகள் கண்டு பிடிக்கப்பட்டது.

கடற்படையினரின் விசாரணையில், மீனவர்கள் சரியான உரிமம் இல்லாமல் கடல் அட்டைகள் பிடித்தமை தெரிய வந்தது.

கைது செய்யப்பட்டவர்கள், 23 மற்றும் 33 வயதுடையவர்கள் எனவும், மன்னார் மற்றும் கொண்டச்சிக்குடாவில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்த சோதனையின் போது 02 டிங்கிகள், 02 ஓ.பி.எம்.கள், 977 சட்ட விரோதமாக பிடிக்கப்பட்ட கடல் அட்டைகள், ஆகியவற்றை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

மேலதிக விசாரணைகளை கடற்படையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க
உலகுக்கு விடுக்கப்பட்டது “கறுப்புச்சாவு” அச்சுறுத்தல்! சீனாவில் மீண்டும் பிளேக் பயங்கரம்

உலகுக்கு விடுக்கப்பட்டது “கறுப்புச்சாவு” அச்சுறுத்தல்! சீனாவில் மீண்டும் பிளேக் பயங்கரம்

கடைசி நேரத்தில் விடுதலைப்புலிகளின் தளபதிகள் கூறியதாக காலம் கடந்து வெளியான தகவல்!

கடைசி நேரத்தில் விடுதலைப்புலிகளின் தளபதிகள் கூறியதாக காலம் கடந்து வெளியான தகவல்!

அத்துமீறினால் தாக்கி அழிப்போம்: அமெரிக்காவை எச்சரித்துள்ள சீனா!

அத்துமீறினால் தாக்கி அழிப்போம்: அமெரிக்காவை எச்சரித்துள்ள சீனா!