புலம்பெயர் சமூகம் மீது சிறிலங்கா ராணுவத் தளபதி குற்றச்சாட்டு!!

144shares

தற்போது நாட்டில் நிலவும் சமாதானத்தை குழப்புவதற்காக வெளிநாடுகளில் வாழுகின்ற சிலர், அடிப்படையற்ற குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருவதாக ஸ்ரீலங்கா இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா குற்றம்சாட்டியுள்ளார்.

இந்திய ஊடகமான 'பாரத்சக்தி' செய்திச் சேவையின் தலைமை ஆசிரியர் நிக்கில் கோக்லேக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே ஸ்ரீலங்கா இராணுவத் தளபதி இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்திருக்கின்றார்.

ஸ்ரீலங்காவில் 2009 ஆம் ஆண்டு மே மாதம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட போரின் இறுதிக்கட்டத்தில் மிகவும் கொடூரமான மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றதுடன், பல்லாயிரக்கணக்கான அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதாக ஐக்கிய நாடுகள் சபை உட்பட சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் அறிக்கையிட்டுள்ளன.

ஸ்ரீலங்கா இராணுவம் மீதும், அப்போதைய ஆட்சியாளர்கள் மீதும் இன்றும் இந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்ந்தும் முன்வைக்கப்படுவது தொடர்பில் பாரத்சக்தி செய்திச் சேவையின் தலைமை ஆசிரியர் நிக்கில் கோக்லே எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ஸ்ரீலங்கா இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா.

எல்லாவற்றிற்கும் முதலில் இந்த குற்றச்சாட்டுக்களை முன்வைப்பவர்கள் தம்மீது அனுதாபத்தை பெற்றுக்கொள்ளவும், இன்னமும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு சார்பாக இருப்பவர்களும் என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.

யுத்த களத்தில் இருந்தவர்கள் என்ற ரீதியில் உங்களுக்கும் தெரியும் நாம் எந்தளவிற்கு மனிதாபிமான அடிப்படையில் செயற்பட்டோம் என்பதை. அதனால் தம்மீதான இந்தக் குற்றச்சாட்டுக்கள் அடிப்படையற்றவை என்றும் ஸ்ரீலங்கா இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா இராணுவம் மீதான எந்தவொரு குற்றச்சாட்டுக்களும் இதுவரை நிரூபிக்கப்படவில்லை என்றும் கூறியுள்ள ஷவேந்திர சில்வா, தன் மீதான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் மூன்று நீதிமன்ற விசாரணைகளுக்கு முகம்கொடுத்ததாகவும் கூறியுள்ளார்.

அந்த விசாரணைகளில் தான் எந்தவொரு குற்றத்திலும் ஈடுபடவில்லை என்பது உறுதியானதாகவும் தெரிவித்த ஸ்ரீலங்கா இராணுவத் தளபதி,அதனால் அனைவருக்கும் நீதி சமமானது என்றால் அந்த நீதி தனக்கும் வழங்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இறுதிக்கட்ட போரின் போது இடம்பெற்ற போர் குற்றங்கள் உட்பட மோசமான மனித உரிமை மீறல்களுடன் தொடர்புடைய படையணியாக ஐக்கிய நாடுகள் சபையினாலும் அடையாளப்படுத்தப்பட்டுள்ள 58 ஆவது படையணியின் கடட்ளைத் தளபதியாக கடமையாற்றிய லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வாவை ஸ்ரீலங்கா இராணுவத் தளபதியாக பதவி உயர்வு வழங்கியதை அடுத்து ஐக்கிய நாடுகள் அமைதிகாக்கும் படையணிக்கு ஸ்ரீலங்கா இராணுவத்தை இணைத்துக்கொள்ளாதிருக்க எடுத்துள்ள முடிவு தொடர்பிலும் இந்திய ஊடகவியலாளர் வினவினார்.

ஐக்கிய நாடுகள் அமைதி காக்கும் படையணிக்குத் தேவையான படையினரை அனுப்பும் போது அந்த நாட்டின் இராணுவத் தளபதி யார் என்ற விடையம் முக்கியமானது அல்ல என்று ஸ்ரீலங்கா இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

நாட்டில் பயங்கரவாதத்தை முற்றாக ஒழித்த ஸ்ரீலங்கா இராணுவத்தை ஐ.நா அமைதிகாக்கும் படையணியில் இணைத்துகொண்டு அவர்களின் அனுபவத்தையும்இ திறமையையும் உலக நாடுகள் பயன்படுத்திக்கொள்ளும் என்றும் ஷவேந்திர சில்வா நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

அதேவேளை நாட்டின் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேஜர ஜெனரல் கமல் குணரத்னவும்இ பாதுகாப்பு அமைச்சும் மீண்டும் ஸ்ரீலங்கா இராணுவத்தை ஐ.நா அமைதிகாக்கும் படையணிகளுக்காக அனுப்பிவைக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளதாகவும் லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா மேலும் தெரிவித்துள்ளார்.

இதையும் தவறாமல் படிங்க
முதன்முறையாக விடுதலைப்புலிகள் தொடர்பில் வெளிநாடுகளுக்கு இரகசிய ஆவணத்தை அனுப்பிய கோட்டாபய அரசு

முதன்முறையாக விடுதலைப்புலிகள் தொடர்பில் வெளிநாடுகளுக்கு இரகசிய ஆவணத்தை அனுப்பிய கோட்டாபய அரசு

விடுதலைப்புலிகளின்நிலப்பகுதியில் சிக்கிய அநுருத்த ரத்வத்த குழுவினரை காப்பாற்றியவருக்கு கிடைக்கவுள்ள உயர் பதவி

விடுதலைப்புலிகளின்நிலப்பகுதியில் சிக்கிய அநுருத்த ரத்வத்த குழுவினரை காப்பாற்றியவருக்கு கிடைக்கவுள்ள உயர் பதவி

இலங்கை எடுத்த முடிவு! கோட்டாபய அரசை புகழ்ந்து தள்ளிய அமெரிக்கா

இலங்கை எடுத்த முடிவு! கோட்டாபய அரசை புகழ்ந்து தள்ளிய அமெரிக்கா