சுவிஸ் தூதரக பெண் கடத்தல்! பொலிஸ் அதிகாரி வெளியிட்ட புதிய தகவல்

217shares

கொழும்பிலுள்ள சுவிஸ் தூதரகத்தின் பெண் பணியாளர் கடத்தப்பட்டமைக்கான எவ்வித சாட்சியங்களும் கிடைக்கவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண மேலும் தெரிவித்துள்ளதாவது

சுவிட்சர்லாந்து தூதரகத்தின் பெண் அதிகாரி கடத்தப்பட்டு தாக்கப்பட்டதாக தெரிவிக்கப்படும் சம்பவம் தொடர்பில் உடனடியாக விசாரணைகளை மேற்கொண்டு உண்மையான விடயங்களை வெளியிட எதிர்பார்த்துள்ளோம்.

குறித்த பெண் அதிகாரியிடம் இருந்து இதுவரையில் எந்தவித தகவலையும் பெறமுடியாமை, இது தொடர்பான விசாரணைகளுக்கு தடையாக அமைந்துள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


you may like this

இதையும் தவறாமல் படிங்க
loading...