தொழிலுக்காக வெளிநாடு செல்வோருக்கு வெளிவந்துள்ள மகிழ்ச்சியான செய்தி!

156shares

தொழில் தேடி வெளிநாடுகளுக்கு செல்வோரிடம் அறவிடப்படும் கட்டணங்கள் குறைக்கப்பட்டுள்ளன.

இதன்படி வெளிநாட்டு தொழிலுக்கு பதிவு செய்வதற்காக அறவிடப்பட்ட 17,837 ரூபா கட்டணம், 16,416 ரூபா வரை குறைக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது.

அதேபோன்று பதிவை புதுப்பிப்பதற்கான கட்டணம் 3,456 ரூபா வரை குறைக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக 3,755 ரூபா அறவிடப்பட்டது.

புதிய அரசாங்கத்தின் வரிச்சலுகைகளின் கீழ் கட்டணக்குறைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது.

இதையும் தவறாமல் படிங்க
loading...