புலம்பெயர்ந்துள்ள தமிழ், சிங்கள, முஸ்லிம்களுக்கு புதிய அரசாங்கம் விடுத்துள்ள மிக முக்கிய செய்தி!!

491shares

இலங்கையில் இருந்து வெளிநாடுகளுக்கு குடிபெயர்ந்தவர்களும், புலம்பெயர்ந்தவர்களும் அவர்கள் சிங்களவர்கள், தமிழர்கள் அல்லது முஸ்லிம்கள் என்ற வேறுபாடு இன்றி அனைத்து இலங்கையர்களும் நாட்டின் அபிவிருத்தியில் பங்குபற்றலாம் என வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார்.

ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பதற்காக வெளிநாட்டில் உள்ள இலங்கை வாக்காளர்கள் பலர் இலங்கைக்கு வந்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வேட்பாளருக்கு வாக்களித்ததாகத் தெரியவருகிறது.

நாட்டின் அபிவிருத்தியில் பங்குபற்ற அவர்களுக்கும் வாய்ப்பளிக்கப்படுமா என எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே இதை குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில்,

இலங்கையில் இருந்து வெளிநாடுகளுக்கு குடிபெயர்ந்தவர்களும், புலம்பெயர்ந்தவர்களும் அவர்கள் சிங்களவர்கள், தமிழர்கள் அல்லது முஸ்லிம்கள் என்ற வேறுபாடு இன்றி அனைத்து இலங்கையர்களும் நாட்டின் அபிவிருத்தியில் பங்குபற்றலாம்.

வடக்கிலும் கிழக்கிலும் நல்லெண்ண நடைமுறையை விரைவுபடுத்துவதாக ஜனாதிபதி அறிவித்துள்ளார்.

வடக்கில் கண்ணிவெடி அகழ்வு நடவடிக்கைகள் இன்னும் முழுமை பெறவில்லை என்பதை நாம் மறக்கக் கூடாது.

மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த காலத்தில் கண்ணிவெடி அகழ்வு, நடவடிக்கைகள் துரிதகதியில் இடம்பெற்றன.

எனினும் கடந்த சில வருடங்களாக மந்த கதியிலேயே கண்ணிவெடி அகழ்வு நடவடிக்கைகள் இடம்பெற்றன.

அடுத்த வருடமளவில் கண்ணிவெடி அகழ்வு நடவடிக்கைகளை முடிப்பதற்கு நாம் எதிர்பார்த்துள்ளோம்.

இதேநேரம் இடம்பெயர்ந்தவர்களுக்கான மீள்குடியேற்றம் மற்றும் வீடமைப்பு நடவடிக்கைகள் கடந்த நான்கரை வருடங்களில் முழுமை பெறாமல் உள்ளன.

இந்த வேலைகளை நாம் விரைவுபடுத்துவோம். எனவே வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களுக்கு மீண்டும் தமது தாய்நாட்டுக்கு வந்து அதன் அபிவிருத்தியில் பங்குபற்றுமாறு பகிரங்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் அபிவிருத்தி செயற்பாடுகளில் புலம்பெயர்ந்த தமிழர்கள் பங்குபற்றுவதற்கு இருந்து வந்த முட்டுக்கட்டைகள் ஜனாதிபதியினால் ஏற்கனவே தளர்த்தப்பட்டுள்ளன.

எனவே புலம்பெயர்ந்தோர் இலங்கைக்கு தைரியமாக வரலாம். வந்து வடக்கு கிழக்கின் அபிவிருத்தி வேலைகளில் பங்கேற்கலாம்.


you may like this

இதையும் தவறாமல் படிங்க
யாழ் மாவட்டத்தின் முக்கிய தேர்தல் தொகுதிகளின் முடிவுகள் வெளியாகின! முன்னிலையில் யார்?

யாழ் மாவட்டத்தின் முக்கிய தேர்தல் தொகுதிகளின் முடிவுகள் வெளியாகின! முன்னிலையில் யார்?

ஸ்ரீலங்கா தேர்தலில் இதுவரையான முடிவுகளின் விபரம்! முன்னிலையில் யார்? தமிழர் தரப்பின் நிலை?

ஸ்ரீலங்கா தேர்தலில் இதுவரையான முடிவுகளின் விபரம்! முன்னிலையில் யார்? தமிழர் தரப்பின் நிலை?

வெற்றிக்கொண்டாட்டத்தில் மஹிந்த! நாமல் வெளியிட்ட புகைப்படம்

வெற்றிக்கொண்டாட்டத்தில் மஹிந்த! நாமல் வெளியிட்ட புகைப்படம்