உடனடியாக குறைக்கப்பட்ட விலை! பொது மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

97shares

பாண் தவிர்ந்த ஏனைய பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலைகளை உடனடியாக 5 ரூபாவால் குறைக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

கில இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கம் நாட்டிலுள்ள அனைத்து பேக்கரி உரிமையாளர்களுக்கும் இதை அறிவித்துள்ளது.

பாரியளவில் வரி வீதத்தை அரசாங்கம் குறைத்துள்ளதால் அதன் பிரதிபலன் மக்களுக்கு சென்று சேரவேண்டுமென்ற அடிப்படையில் இக் கோரிக்கையை பேக்கரி உரிமையாளர் சங்கம் விடுத்துள்ளது.

“புதிய அரசாங்கம், வற் வரி உட்பட பல வரிகளை பாரிய அளவில் குறைத்துள்ளது. இதன் காரணமாக சிறு உற்பத்தியாளர்கள் பாரிய நன்மையடைவர்.

17 சதவீதமாக இருந்த வற் வரி 8 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. அத்துடன், 10 இலட்சம் வருமானம் பெறும் கம்பனிகளுக்கு விதிக்கப்பட்ட வரி நீக்கப்பட்டது.

இதனால் 90 சதவீதமான பேக்கரி உரிமையாளர்கள் இனி வரி செலுத்த வேண்டிய அவசியம் ஏற்படாது. ஆகவே, இந்த பாரிய வரி சலுகையின் பிரதிபலன் மக்களுக்குச் சென்றுசேர வேண்டும்.

அதற்காகவே, பாண் தவிர்ந்த ஏனைய பேக்கரி பொருட்களின் விலையை உடனடியாக 5 ரூபாவால் குறைக்குமாறு பேக்கரி உரிமையாளர்களுக்கு அறிவித்துள்ளோம்.”என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கத்தின் தலைவர் ஏ.ஆர்.ஜயரத்ன தெரிவித்துள்ளார்.


you may like this

இதையும் தவறாமல் படிங்க
loading...