இலங்கையின் தலையெழுத்தை மாற்றும் சக்தி பிரித்தானியாவில் உள்ள இலங்கையர்களிடம் உண்டு! அரசாங்கம்

145shares

பிரித்தானியாவில் கணிசமான அளவு இலங்கையின் புலம்பெயர் சமூகம் வசிக்கிறது. இவர்கள் தேர்தல் பெறுபேறுகளை மாற்றக் கூடிய அளவில் உள்ளனர் என வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

பிரிட்டனில் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் ஒரு சில தொகுதிகளில் இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலை பற்றி பேசப்படுகிறது.

இது தொடர்பில் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் தினேஷ் குணவர்த்தன கருத்து தெரிவிக்கையில்,

பிரிட்டனில் உள்ள இலங்கை உயர் ஸ்தானிகர் இந்த விடயத்தையிட்டு கடந்த 27ம் திகதி கவனத்தை ஈர்த்திருக்கிறார்.

பிரிட்டனில் கணிசமான அளவு இலங்கையின் புலம்பெயர் சமூகம் வசிக்கிறது. இவர்கள் தேர்தல் பெறுபேறுகளை மாற்றக் கூடிய அளவில் உள்ளனர். அதிகாரத்தைக் கைப்பற்ற நினைக்கும் கட்சிகள் மேற்படி புலம்பெயர் சமூகத்தினரைத் திருப்திப்படுத்தும் வகையில் நடவடிக்கையில் இறங்குவதுண்டு.

முன்னரும் இதுபோல் நடந்துள்ளது. அதனால்தான் மேற்படி கதைகளைப் பரப்பி அதன் மூலம் இலாபம் பெற முனைகின்றனர்.

இதுபற்றி நாம் பிரிட்டிஷ் அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியுள்ளோம். பிரிட்டிஷ் பிரதமர் ஒருவர் முன்னர் ஒருமுறை இதுபோன்ற கருத்துக்களை சர்வஜன வாக்கெடுப்பு ஒன்று நடத்திய சமயத்தில் வெளிப்படுத்தியிருந்தார்.

எனினும் அதன்மூலம் அவர்களுக்கு நினைத்த அளவு சாதகமான பலன் கிடைக்கவில்லை. குறிப்பிட்ட சில தொகுதிகளில் அவர் எதிர்பார்ப்புக்கு மாறாக நிராகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

பிரிட்டனில் அடுத்த வாரம் தேர்தல் வரப் போகிறது. அரசியல்வாதிகள் இப்போது பிரசாரத்தில் மும்முரமாக உள்ளனர்.

இலங்கையைப் பற்றி தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டுள்ள ஒரு பிரதான அரசியல் கட்சி இலங்கையில் உள்ள உண்மை நிலையைப் பற்றி தெரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும்.


you may like this

இதையும் தவறாமல் படிங்க
யாழ் மாவட்டத்தின் முக்கிய தேர்தல் தொகுதிகளின் முடிவுகள் வெளியாகின! முன்னிலையில் யார்?

யாழ் மாவட்டத்தின் முக்கிய தேர்தல் தொகுதிகளின் முடிவுகள் வெளியாகின! முன்னிலையில் யார்?

ஸ்ரீலங்கா தேர்தலில் இதுவரையான முடிவுகளின் விபரம்! முன்னிலையில் யார்? தமிழர் தரப்பின் நிலை?

ஸ்ரீலங்கா தேர்தலில் இதுவரையான முடிவுகளின் விபரம்! முன்னிலையில் யார்? தமிழர் தரப்பின் நிலை?

வெற்றிக்கொண்டாட்டத்தில் மஹிந்த! நாமல் வெளியிட்ட புகைப்படம்

வெற்றிக்கொண்டாட்டத்தில் மஹிந்த! நாமல் வெளியிட்ட புகைப்படம்