கிளிநொச்சியில் இடம்பெற்ற கோரம்! ஒரு வயது குழந்தை பரிதாபமாக பலி!

140shares

கிளிநொச்சி – கந்தபுரம் பகுதியில் தென்னை மரமொன்று முறிந்து விழுந்ததில் குழந்தையொன்று உயிரிழந்துள்ளதாக அக்கராயன் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த அனர்த்தம் நேற்று (8) காலை இடம்பெற்றுள்ளது. இதில் ஒரு வயதுடைய குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.

குறித்த குழந்தையை அவரது அம்மம்மா நேற்று காலை குளிப்பாட்டிக்கொண்டிருந்த போது, குழந்தை மீது தென்னை மரம் சரிந்து விழுந்துள்ளது.

இதனையடுத்து படுகாயமடைந்த இருவரையும் வைத்தியசாலையில் அனுமதித்துள்ள நிலையில், குழந்தை உயிரிழந்துள்ளது.

குழந்தையின் அம்மம்மா படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை அக்கராயன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


you may like this

இதையும் தவறாமல் படிங்க
loading...