ஊழல் அற்ற அதிகாரியாக தேர்வு செய்யப்பட்ட வைத்தியர் சத்தியமூர்த்தி!

37shares

இலங்கையின் ஊழலற்ற அதிகாரிகள் தேர்வில் யாழ்.போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தி தமிழ் அதிகாரியாக ஐவரில் ஒருவராக தெரிவு செய்யப்பட்டு விருது பெற்று எம்மவர்களுக்கு பெருமை சேர்த்துள்ளார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை அடிப்படை வசதிகள் சீர்குலைந்திருந்த வேளை 2015 ஆம் ஆண்டு அதன் பணிப்பாளராக பொறுப்பேற்றார் மருத்துவர் சத்தியமூர்த்தி.

அவரது விடாமுயற்சி கடின உழைப்பால் இன்று யாழ்.போதனா வைத்தியசாலை நிமிர்ந்து நிற்கிறது.

இந்த நிலையில் ஊழலற்ற நிர்வாகத்துக்கான குறுஞ்செய்தி அனுப்பும் தேர்தலில் மருத்துவர் சத்தியமூர்த்தியும் தெரிவு செய்யப்பட்டிருந்தார்.

இந்த தேர்தல் டிசம்பர் 06 ஆம் திகதி முடிவடைந்த நிலையில் அவருக்கு பெருமளவில் வாக்குகள் குவிந்தது.

இதனையடுத்து இலங்கையின் ஊழலற்ற அதிகாரியாக தெரிவுசெய்யப்பட்டு நேற்றைய தினம் வைத்தியர் சத்தியமூர்த்திக்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.

ஐபிசி தமிழின் “இன்றைய விருந்தினர்” நிகழ்ச்சியில் வைத்தியர் சத்தியமூர்த்தி அவர்களுடன் ஒரு சந்திப்பு...

இதையும் தவறாமல் படிங்க
loading...