கனடாவிலிருந்து வந்த முதியவருக்கு யாழ்ப்பாணத்தில் நடந்த விபரீதம்! வெளிநாட்டில் பிள்ளைகள் பரிதவிப்பு

230shares

கனடாவிலிருந்து உறவினர்களை பார்ப்பதற்கு யாழ்ப்பாணம் சென்ற முதியவர் சாவகச்சேரி மீசாலை பகுதியில் நேற்று முன் தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற வீதி விபத்தில் சிக்கி படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

மீசாலை வடக்கைச் சேர்ந்த சின்னத்தம்பி சுந்தரலிங்கம் (வயது-83) என்பவரே உயிரிழந்தவராவார் என்று பொலிஸார் கூறினர்.

முதியவரின் பிள்ளைகள் அமெரிக்காவில் வசித்து வருகின்றனர். இவர் கடந்த மாதம் 2ஆம் திகதி உறவினர்களை பார்ப்பதற்கு யாழ்ப்பாணம் சென்றுள்ளார்.

நேற்று முன்தினம்(8) மீசாலை வீரசிங்கம் மகாவித்தியாலயத்தில் இடம்பெற்ற பழைய மாணவர் சங்க கூட்டத்தில் கலந்து கொண்டுவிட்டு துவிச்சக்கர வண்டியில் வீடு திரும்பிக்கொண்டு இருந்துள்ளார்.

வீதியின் வலது பக்கம் திரும்ப முற்பட்ட போது பின் திசையில் வந்த மோட்டார் சைக்கிள் முதியவரை மோதி தள்ளியுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த முதியவரை வீதியால் சென்றவர்கள் மீட்டு சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதித்திருந்தனர்.

பின்னர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். எனினும் அவர் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று(9) இரவு உயிரிழந்தார் என்று சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர்.

இறப்பு விசாரணை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்று மதியம் இடம்பெற்றது. திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் இறப்பு விசாரணயை முன்னெடுத்தார்.

உடற்கூற்று பரிசோதணையின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

முதுமையிலும் தான் பிறந்த மண்ணில் பல கனவுகளுடன் சென்ற முதியவரின் மரணம் குடும்பத்தாருக்கு பாரிய கவலையையும் பெரும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.


you may like this

இதையும் தவறாமல் படிங்க
யாழ் மாவட்டத்தின் முக்கிய தேர்தல் தொகுதிகளின் முடிவுகள் வெளியாகின! முன்னிலையில் யார்?

யாழ் மாவட்டத்தின் முக்கிய தேர்தல் தொகுதிகளின் முடிவுகள் வெளியாகின! முன்னிலையில் யார்?

ஸ்ரீலங்கா தேர்தலில் இதுவரையான முடிவுகளின் விபரம்! முன்னிலையில் யார்? தமிழர் தரப்பின் நிலை?

ஸ்ரீலங்கா தேர்தலில் இதுவரையான முடிவுகளின் விபரம்! முன்னிலையில் யார்? தமிழர் தரப்பின் நிலை?

வெற்றிக்கொண்டாட்டத்தில் மஹிந்த! நாமல் வெளியிட்ட புகைப்படம்

வெற்றிக்கொண்டாட்டத்தில் மஹிந்த! நாமல் வெளியிட்ட புகைப்படம்