ஹிஸ்புல்லாவுடன் பேசப்போகிறது சிறிலங்கா அரசாங்கம்!!

84shares

மட்டக்களப்பு பல்கலைக்கழகம் தொடர்பில் ஹிஸ்புல்லாவுடன் பேச உயர் கல்வி அமைச்சு தீர்மானத்துள்ளது.

சர்ச்சைக்குரிய மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகம் தொடர்பில் ஸ்ரீலங்காவின் உயர் கல்வி அமைச்சு அதன் நிறுவனரான முன்னாள் கிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாவுடன் முக்கியமான பேச்சுவார்த்தை ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சவுதி அரேபிய நிதி உதவியுடன் மட்டக்களப்பில் நிர்மாணிக்கப்பட்டுள்ள தனியார் பல்கலைக்கழகத்தை முடக்கிவிடாது, தேசிய பல்கலைக்கழக கட்டமைப்பிற்குள் உள்வாங்க நடவடிக்கை எடுக்குமாறு ஸ்ரீலங்கா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அண்மையில் உயர் கல்வி அமைச்சு உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் விடுத்திருந்த நிலையிலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டிருக்கின்றது.

இதையும் தவறாமல் படிங்க
loading...