ராஜபக்ச குடும்பத்தை ஒழிக்க சதி: பௌத்த தேரர் கடும் எச்சரிக்கை!!

67shares

ஸ்ரீலங்கா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச உட்பட ராஜபக்ச குடும்பத்தை அழித்து நாட்டை அழித்துவிட பாரிய சதித்திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருவதாக சிங்கள பௌத்த மக்களின் செல்வாக்கு மிக்க பௌத்த பிக்குவான உடுவே தம்மாலோக்க தேரர் பரபரப்பு தகவலொன்றை வெளியிட்டுள்ளார்.

இதற்கான நடவடிக்கைகயில் ஈடுபட்டுள்ள சக்திகள் ஒருசில மகாநாயக்கர்கள் உட்பட தலைமை பிக்குகளை விலைகொடுத்து வாங்கியிருப்பதாகவும் எச்சரித்துள்ள உடுவே தம்மாலோக்க தேரர்இ இதனால் தேர்தல் வெற்றியை அடுத்து இணைந்துகொண்டவர்கள் தொடர்பில் மிகவும் அவதானமாக இருக்குமாறு ராஜபக்ச சகோதரர்களுக்கு ஆலோசணையும் வழங்கியிருக்கின்றார்.

இதையும் தவறாமல் படிங்க
loading...