தமிழ் மொழியில் பேசமுடியாமல் போனதுக்கு வருந்துகிறேன்! கிழக்கின் புதிய ஆளுநர் கவலை

40shares

கிழக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள அனுராத ஜயம்பத் இன்று திருகோணமலையிலுள்ள கிழக்கு மாகாண அலுவலகத்தில் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

கடந்த 4 ஆம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் கிழக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்ட நிலையிலேயே இன்றைய தினம் உத்தியோகபூர்வமாக கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்

கடமைகளை பொறுப்பேற்றதன் பின்னர் அவர் உரையாற்றுகையில்,

இந்த ஆளுநர் பதவியை ஜனாதிபதி என்னை பிரத்தியேகமாக அழைத்து வழங்கியிருந்தார். அத்துடன் தூர நோக்குடைய தலைவரின் தலைமைத்துவத்தின் கீழ் கிழக்கு மாகாண ஆளுநர் பதவியை பொறுப்பேற்றமை மாபெரும் பாக்கியமாக கருதுவதாகவும் தெரிவித்துள்ளார்.

தன்னால் தமிழ் மொழியில் உரையாற்ற முடியாமல் போனதற்கு வருந்துவதாகவும், குறுகிய காலத்தில் தமிழ் மொழியை கற்று உரையாற்றுவேன் எனவும் தெரிவித்தார்.

கிழக்கு மாகாணம் அழகிய ஒரு மாகாணமாகும். அது மாத்திரமல்ல ஏராளமான இயற்கை வளங்கள் மனித வளங்கள் கொண்ட ஒரு மாகாணமாக காணப்படுகின்றது.

எனவே, இந்த மாகாணத்தில் இருக்கக்கூடிய வளங்களை பயன்படுத்தி நாட்டை போசிக்கக்கூடிய தன்மை காணப்படுகிறது. இது எமக்கே உரித்தானது.

பௌத்த கலாசார மரபுரிமைகள் கொண்ட நாடாக இந்நாடு காணப்பட்ட போதும் ஏனைய இன மக்கள் கலாசாரங்களை பின்பற்றி வாழக்கூடிய சூழ்நிலையை ஏற்படுத்த முடியும் என்றும் நாட்டு நலன் கருதி இளைஞர்கள் பாதைகளை, பொது இடங்களை அழகுபடுத்துகின்ற முயற்சிகளை சுயமாக மேற்கொண்டு வருவதாகவும் இம்முயற்சி நாட்டுக்கு முன் மாதிரியாக அமைகின்றது எனவும் தெரிவித்திருந்தார்.

அதேபோல இளைஞர்கள் கைவிடப்பட்ட காணிகளில் பயிர்ச் செய்கைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.

இந்த முயற்சியை அரச அதிகாரிகள், ஏனையவர்கள் முன்மாதிரியாகக் கொண்டு நாட்டின் அபிவிருத்திக்கு பூரண ஒத்துழைப்பு வழங்க கூடியவர்களாக மாறவேண்டும்.

கோட்டாபய ராஜபக்சவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்ட சௌபாக்கிய இலக்கில் வறுமையை ஒழித்தல் முதன்மையான நோக்கமாக காணப்படுவதால் வறுமையை ஒழிக்க நிவாரணம் அல்லது மானியங்கள் வழங்கல் ஆகியவற்றால் மாத்திரம் முடியாது, இவற்றை ஒழிக்க பல புதிய திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அதன் அடிப்படையில் சுய தொழில் அடிப்படையிலான வேலைத் திட்டத்தை கிழக்கு மாகாணத்தில் ஆரம்பிக்க முன் மொழிவதாக, மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் ஆரியவதி கலப்பதி, மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஐயந்த விஜேசேகர, திணைக்கள தலைவர்கள், மாவட்ட செயலாளர்கள் மற்றும் உள்ளூராட்சி மன்ற தலைவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டார்கள்.

முன்னாள் ரியல் அட்மிரல் சரத் வீரசேகர, கிழக்கு மாகாண ஆளுநரின் தாயார், அரசியல்வாதிகள், அரசியல் தலைவர்கள் உட்பட மற்றும் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.


you may like this

இதையும் தவறாமல் படிங்க
பாலியல் லஞ்சம்! இரவு வேளையில் கைது செய்யப்பட்ட கிராம சேவகர்

பாலியல் லஞ்சம்! இரவு வேளையில் கைது செய்யப்பட்ட கிராம சேவகர்

இலங்கையை சேர்ந்தவரின் நிறுவனத்தில் பணிபுரிந்த தமிழ் பெண்களுக்கு நேர்ந்த அவலம்

இலங்கையை சேர்ந்தவரின் நிறுவனத்தில் பணிபுரிந்த தமிழ் பெண்களுக்கு நேர்ந்த அவலம்

விமான நிலையம் திறப்பு தொடர்பில் பிரதமர் வெளியிட்ட தகவல்

விமான நிலையம் திறப்பு தொடர்பில் பிரதமர் வெளியிட்ட தகவல்