யாழ் பெண்களை குறிவைக்கும் சுவிட்சர்லாந்தின் சில தமிழ் மாபியாக்கள்! ஆதாரத்துடன் வெளியான திடுக்கிடும் காணொளி

661shares

சுவிட்சர்லாந்தில் அழகு நிலையத்துக்கு பெண்பிள்ளைகள் தேவை எனவும் அவர்கள் கவர்ச்சியானவர்களாக இருக்கவேண்டுமெனவும் தெரிவித்து தொலைபேசி அழைப்புக்களை எடுத்து யாழ்ப்பாண தமிழ் பெண்பிள்ளைகளின் புகைப்படங்களை பெற்று அவர்களை சீரழிக்கும் செயல்களில் ஈடுபட்டுள்ளது மாபியா கும்பல் ஒன்று.

இவ்வாறு அவர்களின் ஆசை வார்த்தைகளை நம்பி தமது புகைப்படங்களை யாழ்ப்பாணத்திலிருந்து அனுப்பிய தமிழ் யுவதிகள் செய்வதறியாது திகைத்து நிற்கின்றனர்.

இவ்வாறு யாழ்ப்பாண பெண்களின் புகைப்படங்களை பெற்ற மாபியாக்கள் அவற்றை சமுக வலைத்தளங்களிலும் வெளியிட்டுள்ளதால் அவை வைரலாகி பரவி வருகின்றன.

வெளிநாட்டு வாழ்க்கை தொடர்பான மாயையில் மூழ்கியிருக்கும் யாழ்ப்பாண யுவதிகள், யார் என்றே முகம் தெரியாதவர்களுக்கு தமது புகைப்படங்களை கொடுத்து இன்று தமது வாழ்க்கையையே தொலைத்து நிற்கின்ற அவலநிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இதனால் அதிர்ச்சியும் மனவிரக்திக்கும் அவர்கள் தள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

இந்த மாபியா கும்பலின் செயற்பாடு தொடர்பில் அதில் தொடர்புபட்டவர் தெரிவிக்கும் அதிர்ச்சி தகவல்கள் இதோ.....

இதையும் தவறாமல் படிங்க
loading...