நித்தியானந்தா தொடர்பில் யாழ் நல்லை ஆதீனம் அதிரடி அறிவிப்பு

  • Dias
  • December 13, 2019
893shares

நல்லை ஆதீனத்துக்கும் சுவாமி நித்தியானந்தாவுக்கும் எந்தத் தொடர்புமில்லை என்று நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

மேலும் அவர் குறிப்பிட்டுள்ளதாவது...

சுவாமி நித்தியானந்தாவின் கருத்தை சர்ச்சைக்குரிய கருத்தாகவே பார்க்கின்றோம். அவருடன் எங்களுக்கும் எந்த தொடர்புகளும் இல்லை.

எமது இந்து மதப் பணிகளுக்கு இடையூறு வரும் வகையிலும் எமக்கு குடைச்சல் கொடுக்கும் வகையில் இந்த கருத்து நித்தியானந்தாவால் வெளியிடப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்தியாவின் சர்ச்சைக்குரியவரான நித்தியானந்த தனது முகநூலில் வெளியிட்டுள்ள காணொலியில் தனது அடுத்து இலக்கு இலங்கையில் உள்ள நல்லை ஆதீனம் எனக் குறிப்பிட்டுள்ளார்.

அதுதொடர்பில் பதிலளிக்கும் போதே நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் இந்தக் கருத்தை வெளியிட்டார்.

இதையும் தவறாமல் படிங்க
loading...