புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களுக்கு முக்கிய அறிவித்தல்! விரைந்து செயற்படவும்

549shares

யாழ். மாவட்டத்தில் கைவிடப்பட்ட நிலையில் காணப்படும் காணிகளை உரிமையாளர்கள், பராமரிப்பவர்கள் துப்புரவு செய்யாத பட்சத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என யாழ் மாவட்டத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற டெங்கு மீளாய்வுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது

யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் அங்கஜன் இராமநாதனின் ஏற்பாட்டில் இன்றைய தினம் டெங்கு மீளாய்வு கூட்டம் யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

குறித்த டெங்கு முதல் ஆய்வுக் கூட்டத்தின்போது பல்வேறுபட்ட விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்டது. அந்தக் கூட்டத்தின் போது மாவட்ட மற்றும் பிரதேச செயலக ரீதியாக குழுக்களை நியமித்து டெங்கு நோய் உருவாக்கும் நுளம்பை கட்டுப்படுத்தும் வேலைத்திட்டங்கள் தொடர்பில் ஆராய்வதெனவும் அத்தோடு எதிர்வரும் மூன்று கிழமைகளுக்கு டெங்கு ஒழிப்பு வேலைத் திட்டத்தினை அனைத்து திணைக்களங்களும் இணைந்து செயலாற்றுவது எனவும் அத்தோடு பொலிஸார் மற்றும் முப்படையினரின் உதவியினை தேவையான இடங்களில் பயன்படுத்துவது எனவும் முடிவெடுக்கப்பட்டது.

யாழ். மாவட்டத்தில் மக்கள் டெங்கு நோய் தொடர்பான முறைப்பாடுகளை அறிவிப்பதற்கான அவசர தொலைபேசி இலக்கம் 021 222 5000 இன்றையதினம் அறிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட செயலகத்தில் குறித்த அவசர இலக்கம் செய்யப்படவுள்ளதாகவும் அலுவலக நேரங்களில் யாழ் மாவட்டத்தில் உள்ள மக்கள் தமது டெங்கு நோய் தொடர்பான முறைப்பாடுகளை தெரிவிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

யாழ். மாவட்டத்தில் கைவிடப்பட்ட நிலையில் காணப்படும் காணிகளுக்கு உரிமையாளர்களாக புலம்பெயர்ந்து வாழும் யாழ் குடும்பங்களினுடையதாகவே இருக்கின்றது, எனவே இந்த நடவடிக்கைகளிலிருந்து தப்பிக்க அவர்கள் உடனடியாக துப்பரவு செய்ய முயற்சிக்க வேண்டுமெனவும் கருத்துக்கள் எழுந்துவருகின்றன.

இதையும் தவறாமல் படிங்க
யாழ் மாவட்டத்தின் முக்கிய தேர்தல் தொகுதிகளின் முடிவுகள் வெளியாகின! முன்னிலையில் யார்?

யாழ் மாவட்டத்தின் முக்கிய தேர்தல் தொகுதிகளின் முடிவுகள் வெளியாகின! முன்னிலையில் யார்?

ஸ்ரீலங்கா தேர்தலில் இதுவரையான முடிவுகளின் விபரம்! முன்னிலையில் யார்? தமிழர் தரப்பின் நிலை?

ஸ்ரீலங்கா தேர்தலில் இதுவரையான முடிவுகளின் விபரம்! முன்னிலையில் யார்? தமிழர் தரப்பின் நிலை?

வெற்றிக்கொண்டாட்டத்தில் மஹிந்த! நாமல் வெளியிட்ட புகைப்படம்

வெற்றிக்கொண்டாட்டத்தில் மஹிந்த! நாமல் வெளியிட்ட புகைப்படம்