பௌத்த வாக்குகளைப் பெறுவது எப்படி? தீவிர ஆலோசனையில் ரணில் தரப்பு

7shares

சரிந்திருக்கும் பௌத்த செல்வாக்கை கட்டியெழுப்புவதற்கு ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்கள் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டிருப்பதாக அக்கட்சியின் தலைமையகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தலைமைத்துவ சபையொன்றின் மூலம் எதிர்வரும் பொதுத் தேர்தலை வழிநடாத்த ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்கள் ஆலோசனை வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

இத் தலைமைத்துவ சபையில் பௌத்த மக்களின் செல்வாக்கைப் பெற்ற சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு முன்னுரிமை அளிக்குமாறும் சிரேஸ்ட உறுப்பினர்கள் தமது பிரேரணையில் கூறியுள்ளதாக அக்கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர் ஒருவர் தகவல் வெளியிட்டுள்ளார்.

தற்போதைய தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கோ, ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கோ மாத்திரம் பொதுத் தேர்தலை வழிநடாத்தும் தலைமைத்துவத்தை வழங்காது தலைமைத்துவ சபையொன்றின் ஊடாக பொதுத் தேர்தலை வழிநடாத்துவதே அதிக வாய்ப்பானது எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.

ஐக்கிய தேசியக் கட்சியின் சுமார் 30 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதுதொடர்பில் நேற்று கலந்துரையாடியுள்ளதாவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அண்மையில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் பேசிய ரணில் விக்ரமசிங்க, பௌத்த வாக்குகளை இழந்தமையே தேர்தலில் தோல்வியடையக் காரணம் என்று குறிப்பிட்டு இருந்தார்.

இந்நிலையில் இழந்த பௌத்த செல்வாக்கை மீண்டும் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க
யாழ் மாவட்டத்தின் முக்கிய தேர்தல் தொகுதிகளின் முடிவுகள் வெளியாகின! முன்னிலையில் யார்?

யாழ் மாவட்டத்தின் முக்கிய தேர்தல் தொகுதிகளின் முடிவுகள் வெளியாகின! முன்னிலையில் யார்?

ஸ்ரீலங்கா தேர்தலில் இதுவரையான முடிவுகளின் விபரம்! முன்னிலையில் யார்? தமிழர் தரப்பின் நிலை?

ஸ்ரீலங்கா தேர்தலில் இதுவரையான முடிவுகளின் விபரம்! முன்னிலையில் யார்? தமிழர் தரப்பின் நிலை?

வெற்றிக்கொண்டாட்டத்தில் மஹிந்த! நாமல் வெளியிட்ட புகைப்படம்

வெற்றிக்கொண்டாட்டத்தில் மஹிந்த! நாமல் வெளியிட்ட புகைப்படம்