யாழ். நகரில் அதிகளவில் ஒன்று கூடிய இளைஞர்கள்! காரணம் என்ன?

517shares

யாழ்ப்பாணம் நகரில் இளைஞர்கள் ஒன்று கூடி நகரை அழகுபடுத்தும் வேலைத்திட்டத்தினை ஆரம்பித்திருக்கிறார்கள்.

இலங்கையை அழகுபடுத்தும் வேலைத்திட்டத்தினை சமூக வலைத்தளங்களினூடாக இளைஞர்கள் ஆரம்பித்திருக்கிறார்கள். இத் தகவல்கள் இலங்கையின் அனைத்து மாவட்டங்களிலும் பரவி தாமாகவே இளைஞர்கள் முன்வந்து அழகுபடுத்தும் முயற்சியில் இறங்கியிருக்கிறார்கள்.

தேர்தல் காலங்களில் ஒட்டப்பட்ட சுவரொட்டிகளும், விளம்பர நோக்கத்திற்காக ஒட்டப்பட்ட விளம்பர சுவரொட்டிகளையும் அகற்றிவிட்டு, அவ்விடத்தில் வண்ணமயமான ஓவியங்களை வரைந்து நகரை அழகுபடுத்தும் முயற்சிகளில் ஈடுபடுகிறார்கள்.

இந்த நிலையில் இன்றைய தினம் யாழ். நகரில் ஒன்று கூடிய இளைஞர்கள் பலர், நகரை சுத்தம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

அழகிய வண்ணமயமான ஓவியங்களை வரைந்து யாழ் நகரை சுத்தம் செய்யும் தீவிர முயற்சியில் இறங்கியிருக்கும் இந்த இளைஞர்களுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றார்கள்.

இளைஞர்களின் இந்த முயற்சியை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும் பாராட்டியிருக்கிறார்கள். அதேவேளை நாட்டின் சுத்தம் தொடர்பிலும் புதிய ஜனாதிபதி அதிகளவில் கவனம் செலுத்துகிறார் என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.

இதேவேளை, இலங்கை இளைஞர்கள் மட்டுமல்லாது வெளிநாட்டில் இருந்து வருகை தந்த இளைஞர்களும் இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க
loading...