சாவகச்சேரியில் கோர விபத்து! மயிரிழையில் உயிர் தப்பிய இருவர்

126shares

சாவகச்சேரி- சங்கத்தானை பகுதியில் புகையிரத கடவையை கடக்க முயற்சித்த கார் மீது புகையிரதம் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

பொறுப்பற்ற விதமாக புகையிரத கடவையை கடக்க முயற்சித்த நிலையில் கொழும்பிலிருந்து வந்த புகையிரதம் மோதியுள்ளது.

இந்த விபத்து சம்பவத்தில் காரில் பயணித்த இருவர் சிறிய காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர் என அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் இது தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இதையும் தவறாமல் படிங்க
loading...