இலங்கையில் வாகனங்களின் விலையில் ஏற்படவுள்ள அதிரடி மாற்றம்!

143shares

இலங்கையில் சொகுசு வாகனங்களின் இறக்குமதி தீர்வை குறைக்கப்பட்ட நிலையில் சிறிய ரக வாகனங்களின் விலை உயர்வதற்கான சாத்தியக் கூறுகள் நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாகன இறக்குமதியாளர் சங்கத்தின் தலைவர் ரஞ்சன் பீரிஸ் இதனை தெரிவித்துள்ளார்.

எப்படியிருப்பினும், காட்சியறைகளில் விற்பனைக்காக உள்ள வாகனங்கள் பழைய விலையிலேயே விற்பனை செய்யப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இது தவிர, அமெரிக்க டொலர், ஸ்ரேலின் பவுண்ஸ் மற்றும் ஜப்பானிய யென் போன்ற நாணயங்களின் பெறுமதி ஸ்திரத்தன்மையுடன் அதிகரித்து வருவதனால், வாகனங்களை கொள்வனவு செய்பவர்கள் அதிக பணத்தை செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக 75 ஆயிரம் ரூபா செலுத்த வேண்டிய நுகர்வோர் ஒரு லட்சம் ரூபாவினை வழங்க நேரிடும் என வாகன இறக்குமதியாளர் சங்கத்தின் தலைவர் குறிப்பிட்டார்.


you may like this

இதையும் தவறாமல் படிங்க
loading...