ஆட்சி மாற்றத்தின் பின்னர் யாழ்ப்பாணம் சர்வதேச விமானநிலையத்திற்கு ஏற்பட்டநிலை !

126shares

பெரும் ஆடம்பரமாக கடந்த ஆட்சியில் திறந்து வைக்கப்பட்ட யாழ்ப்பாணம் சர்வதேச விமானநிலையத்தின் கட்டுமானப்பணிகள் ஜனாதிபதி தேர்தலை அடுத்து இடம்பெற்ற ஆடசி மாற்றத்தால் முடக்க நிலைக்கு சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த நவம்பர் மாதம் 11 ஆம் திகதி தொடக்கம் சென்னை- யாழ்ப்பாணத்துக்கு இடையிலான பயணிகள் விமான சேவை இடம்பெற்று வருகிறது.

இந்த விமான நிலையத்தில் பணியாற்றும், சுங்க, மற்றும் குடிவரவு அதிகாரிகள் உள்ளிட்ட 100 வரையான அதிகாரிகள், தற்போது, விமான நிலையத்தில் இருந்து 20 கி.மீ தொலைவில் உள்ள யாழ். நகரில் வாடகை வீட்டில் தங்கியுள்ளனர்.

இவர்களுக்கான தங்குமிட வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கான கட்டுமானப் பணிகள் முற்றாக முடங்கிப் போயுள்ளன.

இதுதொடர்பில் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவிடம் எழுப்பிய கேள்விக்கு,

“அடிப்படை வசதிகள் பூர்த்தி செய்யப்படாமல் யாழ்ப்பாணம் விமான நிலையம் திறந்து வைக்கப்பட்டது. இரண்டாம் கட்ட கட்டுமானப் பணிகளை மேற்கொள்வது குறித்த அமைச்சரவைப் பத்திரம் ஒன்றை எனது அமைச்சின் சார்பில், ஜனவரி மாதம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கவுள்ளேன்.

இரண்டாம் கட்ட அபிவிருத்திப் பணிகளுக்காக இந்திய அரசாங்கத்தின் 300 மில்லியன் ரூபா கொடை பயன்படுத்திக் கொள்ளப்படும். விரைவில் அமைச்சரவைப் பத்திரம் அங்கீகரிக்கப்பட்டு, பணிகள் ஆரம்பிக்கப்படும்” என்று கூறினார்.

யாழ்ப்பாணம் விமான நிலையத்தின் முதற்கட்ட அபிவிருத்திக்காக 2250 மில்லியன் ரூபா செலவிடப்பட்டது.

அதேவேளை, விமான நிலையத்தில் பணியாற்றும் பணியாளர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு தங்குமிட வசதி இல்லாமையால், இவர்களுக்காக யாழ். நகரில் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ள வீடு மற்றும் உணவு, ஏனைய செலவினங்களுக்காகவே இந்த நிதியில் பெரும்பகுதி, செலவிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஒக்ரோபர் மாதம் திறந்து வைக்கப்பட்ட விமான நிலைய புறப்பாடு மற்றும் வருகைப் பகுதியில் பணியாற்றும் 100 அதிகாரிகளுக்கும், பயணிகளுக்கும் இரண்டு கழிப்பறைகள் மட்டுமே உள்ளன.

இரண்டாம் கட்ட அபிவிருத்திப் பணிகள் நவம்பர் மாதம் ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டிருந்தது. அதற்கான நிதி ஒதுக்கப்பட்டு அங்கீகாரமும் அளிக்கப்பட்டிருந்ததாக, சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபையின் பணிப்பாளர் குழுவில் இடம்பெற்றிருந்த ஒருவர் தெரிவித்தார்.

எனினும், புதிய அரசாங்கம், பதவிக்கு வந்த பின்னர், அந்தக் குழு கலைக்கப்பட்டதுடன், அதன் பணிகளும் நிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


you may like this

இதையும் தவறாமல் படிங்க
பாலியல் லஞ்சம்! இரவு வேளையில் கைது செய்யப்பட்ட கிராம சேவகர்

பாலியல் லஞ்சம்! இரவு வேளையில் கைது செய்யப்பட்ட கிராம சேவகர்

விமான நிலையம் திறப்பு தொடர்பில் பிரதமர் வெளியிட்ட தகவல்

விமான நிலையம் திறப்பு தொடர்பில் பிரதமர் வெளியிட்ட தகவல்

இலங்கையை சேர்ந்தவரின் நிறுவனத்தில் பணிபுரிந்த தமிழ் பெண்களுக்கு நேர்ந்த அவலம்

இலங்கையை சேர்ந்தவரின் நிறுவனத்தில் பணிபுரிந்த தமிழ் பெண்களுக்கு நேர்ந்த அவலம்