யாழில் இராணுவம் பொலிஸார் குவிப்பு! காரணம் என்ன?

737shares

புதிய அரசாங்கம் பதவியேற்றதன் பின்னர் நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தேசிய பாதுகாப்பினை கருத்திற்கொண்டு யாழ் மாவட்டத்தில் இன்றைய தினம் குருநகர் புறநகர் பகுதியில் சோதனை நடவடிக்கைகள் இடம்பெற்றன.

அந்த வகையில், இன்றைய தினம் குருநகர் பிரதேசம் அதிகாலை சுற்றிவளைக்கப்பட்டு பாரிய தேடுதல் நடவடிக்கை இடம்பெற்றது. பாதுகாப்புச் செயலாளரின் அறிவுறுத்தலுக்கு அமைய யாழ் மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரின் ஒத்துழைப்புடன், யாழ் மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவான் வணிகசூரியவின் ஆலோசனைக்கு அமைய இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அதிகாலை 5.30 மணி தொடக்கம் காலை 6 மணி வரை இந்த சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்த சோதனை நடவடிக்கைக்காக பொலிசார் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் இராணுவத்தினர் இணைக்கப்பட்டு இருந்தனர்.

இதன்போது சந்தேகத்துக்கிடமான எவரும் கைது செய்யப்படவில்லை என்பதுடன் சந்தேகத்துக்கிடமான பொருட்கள் எதுவும் கைப்பற்றப்பட்டு இருக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது. புதிய அரசாங்கம் பதவியேற்ற பின்னர் தேசிய பாதுகாப்புக்கு முன்னுரிமை கொடுத்து வருகின்றது.

இதன்போது பொதுமக்கள் அதிகமாக செறிந்து வாழும் பிரதேசங்கள் மற்றும் கோவில்கள் பள்ளிகள் விகாரைகள் என்பவற்றிற்கு இராணுவத்தினர் போலிசாரின் பாதுகாப்பு வழங்கப்பட்டுவருவதனைக் காணக்கூடியதாக உள்ளது.

இதையும் தவறாமல் படிங்க
யாழ் மாவட்டத்தின் முக்கிய தேர்தல் தொகுதிகளின் முடிவுகள் வெளியாகின! முன்னிலையில் யார்?

யாழ் மாவட்டத்தின் முக்கிய தேர்தல் தொகுதிகளின் முடிவுகள் வெளியாகின! முன்னிலையில் யார்?

ஸ்ரீலங்கா தேர்தலில் இதுவரையான முடிவுகளின் விபரம்! முன்னிலையில் யார்? தமிழர் தரப்பின் நிலை?

ஸ்ரீலங்கா தேர்தலில் இதுவரையான முடிவுகளின் விபரம்! முன்னிலையில் யார்? தமிழர் தரப்பின் நிலை?

வெற்றிக்கொண்டாட்டத்தில் மஹிந்த! நாமல் வெளியிட்ட புகைப்படம்

வெற்றிக்கொண்டாட்டத்தில் மஹிந்த! நாமல் வெளியிட்ட புகைப்படம்