மைதானத்தை மீட்பதற்கு போராட்டத்தில் இறங்கிய மாணவர்களும் பெற்றோர்களும்!

19shares

மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட மன்னார் கருங்கண்டல் மகா வித்தியாலய மாணவர்கள் தமக்கு ஒரு விளையாட்டு மைதானம் வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து இன்று காலை 7.30 மணியளவில் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

மடு கல்வி வலயத்திற்குட்பட்ட கருங்கண்டல் மகா வித்தியாலய மாணவர்கள் இன்று காலை 7.30 மணியளவில் குறித்த விளையாட்டு மைதானத்திற்கு முன் ஒன்று கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

குறித்த ஆர்ப்பாட்டத்தில் பழைய மாணவர்கள், பெற்றோர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

சுமார் 60 வருடங்களுக்கு மேலாக குறித்த பாடசாலைக்கான விளையாட்டு மைதானமாக குறித்த மைதானம் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில், மாந்தை மேற்கு பிரதேச செயலகம் மற்றும் மாந்தை மேற்கு பிரதேச சபை ஆகியவற்றின் அனுமதியுடன் குறித்த விளையாட்டு மைதான பகுதியில் விளையாட்டுக்கழகம் ஒன்றிற்கு இடம் வழங்கப்பட்டு கட்டிடம் அமைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

குறித்த நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தே ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

கருங்கண்டல் மகா வித்தியாலய மாணவர்களின் விளையாட்டு மைதானமாக குறித்த மைதானம் பல வருடங்களாக காணப்படுகின்றது. தற்போது வருடாந்த விளையாட்டு போட்டியும் குறித்த மைதானத்தில் இடம் பெற உள்ளது.

இந்த நிலையில் குறித்த மைதானப்பகுதியில் கட்டிடம் கட்டும் நடவடிக்கை இடம் பெறவுள்ளது. இந்த நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், மைதானத்தை பாதுகாக்க கோரியும் ஆர்ப்பாட்டம் இடம் பெற்றது.

இதன் போது மடு வலயக் கல்விப்பணிப்பாளர் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுடன் கலந்துரையாடினார்.

இதன் போது மாணவர்கள் மற்றும் பெற்றோர் தனித்தனியாக தமது கோரிக்கை அடங்கிய மகஜரை வலயக்கல்விப் பணிப்பாளரிடம் கையளித்தனர்.

இதன் போது குறித்த பிரச்சினை தொடர்பாக துரித நடவடிக்கைகளை மேற்கொள்வதாக அவர் மாணவர்களுக்கு உறுதியளித்தார்.

பின்னர் ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்ட நிலையில் மாணவர்கள் பாடசாலைக்குச் சென்றமை குறிப்பிடத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க
யாழ் மாவட்டத்தின் முக்கிய தேர்தல் தொகுதிகளின் முடிவுகள் வெளியாகின! முன்னிலையில் யார்?

யாழ் மாவட்டத்தின் முக்கிய தேர்தல் தொகுதிகளின் முடிவுகள் வெளியாகின! முன்னிலையில் யார்?

ஸ்ரீலங்கா தேர்தலில் இதுவரையான முடிவுகளின் விபரம்! முன்னிலையில் யார்? தமிழர் தரப்பின் நிலை?

ஸ்ரீலங்கா தேர்தலில் இதுவரையான முடிவுகளின் விபரம்! முன்னிலையில் யார்? தமிழர் தரப்பின் நிலை?

வெற்றிக்கொண்டாட்டத்தில் மஹிந்த! நாமல் வெளியிட்ட புகைப்படம்

வெற்றிக்கொண்டாட்டத்தில் மஹிந்த! நாமல் வெளியிட்ட புகைப்படம்