ஸ்ரீலங்காவில் மீண்டும் மிக மோசமான அடக்குமுறை: இரண்டு சர்வதேச அமைப்புக்கள் குற்றச்சாட்டு!!

416shares

ஸ்ரீலங்கா ஜனாதிபதி கோட்டாபயராஜபக்ச ஆட்சிபீடம் ஏறியதன் பின்னர் குறுகிய காலத்திற்குள் தம்மைவிமர்சிப்போரையும், மனித உரிமை செயற்பாட்டாளர்களையும் அச்சுறுத்தும்நோக்கில் மிக மோசமான அடக்குமுறையை கட்டவிழ்த்துவிட்டுள்ளதாககுற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

மிக நம்பகரமான தகவல்கள்மூலம் இந்த உண்மை தெரியவந்துள்ளதாக ITJP என்றுஅழைக்கப்படும் உண்மைக்கும், நீதிக்குமான சர்வதேச செயற்திட்டமும்,JDS என்று அழைக்கப்படும் ஸ்ரீலங்காவின் ஜனநாயகத்திற்கான ஊடகவிலாளர்அமைப்பு ஆகியன இணைந்து அறிவித்துள்ளன.

“ஸ்ரீலங்காவில் மீண்டும்அடக்குமுறை ஆரம்பம்” என்ற தலைப்பில் ITJP யும்,JDS ம் இணைந்து விடுத்துள்ள புதிய அறிக்கையொன்றில், கடந்த ஆண்டு நவம்பர் மாத நடுப்பகுதியில் ஸ்ரீலங்காவின் ஜனாதிபதியாக பதவியேற்ற கோட்டாபய ராஜபக்ச ஆட்சிக்கு வந்து இரண்டு மாதங்கள் பூர்த்தியாகாத நிலையில். ஊடகவியலாளர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள், சட்டத்தரணிகள், வழக்குத் தொடுநர்கள், கல்வியியலாளர்கள் மற்றும் எதிர்கட்சி உறுப்பினர்களை இக்குவைத்து 70க்கும் மேற்பட்ட அச்சுறுத்தும் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளன.

குறிப்பாக இந்த அச்சுறுத்தல்கள் எந்தளவிற்கு பயங்கரமானவை என்பதை நிரூபிக்கும் வகையில் அச்சுறுத்தப்பட்ட சிலர் உயிராபத்து காரணமாக நாட்டைவிட்டும் தப்பிச்சென்றுள்ளதாகவும் அந்த அமைப்புக்கள் குறிப்பிட்டுள்ளன.

ஸ்ரீலங்காவின் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்படும் அனைத்து முயற்சிகளையும் தவிடுபொடியாக்கும் வகையிலேயே இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக உண்மைக்கும், நீதிக்குமான சர்வதேச செயற்திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் யஸ்மின்சூக்கா குற்றம்சாட்டியுள்ளார்.

குறிப்பாக அதிநவீன மற்றும் துன்புறுத்தும்வகையிலான சோதனை நடவடிக்கைகள் ஊடாக பொதுமக்களின் அடிப்படை உரிமைகளை இல்லாது செய்யும்செயற்பாடாகவும் இந்த நடவடிக்கைகள் அமைந்துள்ளதாகவும் சர்வதேச மனித உரிமை சட்டநிபுணரான யஸ்மின் சூக்கா கவலை வெளியிட்டுள்ளார்.

இதனால் உயிர்த்த ஞாயிறுதாக்குதல்களின் பின்னர் ஸ்ரீலங்காவிற்கு வழங்கப்படும் அதிகரித்த பாதுகாப்புஉதவிகள், மனித உரிமை பாதுகாவலர்கள் மற்றும்ஊடகவிலாளர்களை அடக்கும் செயற்பாடுகளுக்கு பயன்படுத்தப்படக் கூடாது என்ற உத்தரவாதத்தைபெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் ITJP பணிப்பாளர் யஸ்மின்சூக்கா சர்வதேச சமூகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஸ்ரீலங்கா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ அவர் இராணுவத்தில் இருந்த போது அங்கம் வகித்த ஸ்ரீலங்கா இராணுவத்தின் கஜபா படையணியின் சகாக்களை இராணுவத்தின் முக்கிய பதவிகளுக்கு மாத்திரமன்றி, அரசின் அதிகாரமிக்க பதவிகளுக்கு நியமிப்பதன் மூலம் தனது அதிகாரங்களை பலப்படுத்தி வருவதாகவும் ITJP - JDS கூட்டறிக்கையில்குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் பொலிஸாருக்குரிய சட்டம் – ஒழுங்கை நடைமுறைப்படுத்தும் பொறுப்புக்களையும் இராணுவத்தினரிடம் ஒப்படைத்துள்ளதன் ஊடாக பொலிஸ் மற்றும் புலனாய்வுக் கட்டமைப்புக்களையும் இராணுவமயமாக்கி அதன் ஊடாக தனது கட்டுப்பாட்டுக்குள் ஒட்டுமொத்த அரச இயந்திரத்தையும் வைத்திருக்க கோட்டாபய ராஜபக்ச திட்டமிட்டுள்ளதாகவும் இந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மோசடி உள்ளிட்ட கடந்தகாலங்களில் இடம்பெற்ற பாரதூரமான குற்றங்களை விசாரித்தவர்கள் அந்தப் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

யுத்தக் குற்றச்சாட்டுக்கு முகம்கொடுத்துள்ள இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா பதில் படைகளின் பிரதானியாக நியமிக்கப்பட்டமை, மேஜர் ஜெனரல் கமல் குணர்தன பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டமை, தேசிய உளவுத்துறையின் தலைவரான பிரிகேடியர் துவான் சுரேஷ் சாலேயின் நியமனம்,மேஜர் ஜெனரல் ஜகத் அல்விஸ் தேசிய புலனாய்வுத்துறையின் தலைவரான நியமிக்கப்பட்டதையும் கோடிகாட்டியுள்ளன.

அதேபோல் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் தயா ரத்நாயக்க துறைமுக அதிகாரசபையின் தலைவராக நியமிக்கபப்ட்டதையும், முன்னாள் யாழ் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறிசிவில் விமான போக்குவரத்து அதிகார சபையின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதையும் அதேபோல்ஊழல் மோசடிகள் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்ட பீ.பி.ஜயசுதந்தர உட்பட அதிகாரிகளைமீண்டும் முக்கிய பதவிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளதையும் ITJP - JDS தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளன.

பொறுப்புக்கூறலையும், நீதியையும் நிலைநாட்டுவதற்காக அறிக்கையிடும் செயற்பாடுகளை முடக்குவதற்காக மனித உரிமை செயற்பாட்டாளர்களை அச்சுறுத்தும் வகையில் பொலிசாரும்,இராணுவத்தினரும், படைப் புலனாய்வாளர்களும்மிகமோசமான அடக்குமுறைகளை கட்டவிழ்த்துவிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ள ITJP- JDS ஆகிய அமைப்புக்கள் அவை எவ்வாறு நடைமுறைப்படுத்தப்படுகின்றனஎன்பதையும் தமது அறிக்கையில் விபரித்துள்ளன.

ஊழல் மோசடிகள் மற்றும்யுத்தக் குற்றச்சாட்டுகளுக்கு முகம்கொடுத்தவர்கள் ஸ்ரீலங்காவில் ஆட்சி அதிகாரத்தைகைப்பற்றியுள்ளதாக தெரிவிக்கும் JDS ஒருங்கிணைப்பாளரான ஊடகவியலாளர் பாஷன அபேவர்தன, இதுவரை இரகசியமான இயங்கிவந்த அவர்களது அரசு தற்போது அதிகாரபூர்வமாக பகிரங்கமாக செயற்பட்டுவருவதாககுறிப்பிடுகின்றார்.

இதற்கமைய இதுவரை பொறுப்புக்கூறலுக்கும் நீதிக்காகவும் குரல்கொடுத்துவந்த ஊடகவியலாளர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள், கல்வியலாளர்கள் ஆகியோரை மௌனிக்கசெய்துள்ளதாககவும் ஊடகவியலாளர் பாஷன அபேவர்தன சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த அறிக்கையிலுள்ள தகவல்களை திரட்டிக்கொள்ள ஸ்ரீலங்காவில் வாழும் பலர் உதவியிருக்கின்ற போதிலும், அவர்களது பாதுகாப்பு கருதி அவர்களது விபரங்களை வெளியிடவில்லை என்று ITJP - JDS அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.


you may like this

இதையும் தவறாமல் படிங்க
இலங்கையை சேர்ந்தவரின் நிறுவனத்தில் பணிபுரிந்த தமிழ் பெண்களுக்கு நேர்ந்த அவலம்

இலங்கையை சேர்ந்தவரின் நிறுவனத்தில் பணிபுரிந்த தமிழ் பெண்களுக்கு நேர்ந்த அவலம்

விமான நிலையம் திறப்பு தொடர்பில் பிரதமர் வெளியிட்ட தகவல்

விமான நிலையம் திறப்பு தொடர்பில் பிரதமர் வெளியிட்ட தகவல்

பாலியல் லஞ்சம்! இரவு வேளையில் கைது செய்யப்பட்ட கிராம சேவகர்

பாலியல் லஞ்சம்! இரவு வேளையில் கைது செய்யப்பட்ட கிராம சேவகர்