அடித்து உடைக்கப்பட்ட புத்தர் சிலைகள்! அசாத் சாலிக்கு புதிய தலையிடி

266shares

மாவனெல்ல பிரதேசத்தில் புத்தர் சிலையை சேதப்படுத்திய சம்பவத்தில் கைதான நபர்களை விடுதலை செய்வதற்கு அசாத் சாலி தனக்கு அழுத்தம் பிரயோகித்ததாக கேகாலை மாவட்டத்திற்குப் பொறுப்பாக இருந்த முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபர் பாலித்த சிறிவர்தன தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற தீவிரவாத தாக்குதல்கள் குறித்து பாலித்த சிறிவர்தனவிடம் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் விசாரணை செய்துள்ளனர்.

சுமார் 04 மணித்தியாலத்திற்கும் அதிகமான நேரம் நடத்தப்பட்ட இந்த விசாரணையில் இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

மாவனெல்ல பிரதேசத்தில் இனவாதிகளால் புத்தர் சிலை தாக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பாகவும் வாக்குமூலம் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

இது தொடர்பான அனைத்து தகவல்களும் தன்னிடம் இருப்பதாகவும் அவர் சாட்சியத்தில் குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் மேலதிக விசாரணைகளை செய்வதற்காக முன்னாள் ஆளுநர் அசாத் சாலியிடம் விரைவில் வாக்குமூலம் பெறப்படவுள்ளதாக கூறப்படுகிறது.


you may like this

இதையும் தவறாமல் படிங்க
இலங்கையை சேர்ந்தவரின் நிறுவனத்தில் பணிபுரிந்த தமிழ் பெண்களுக்கு நேர்ந்த அவலம்

இலங்கையை சேர்ந்தவரின் நிறுவனத்தில் பணிபுரிந்த தமிழ் பெண்களுக்கு நேர்ந்த அவலம்

விமான நிலையம் திறப்பு தொடர்பில் பிரதமர் வெளியிட்ட தகவல்

விமான நிலையம் திறப்பு தொடர்பில் பிரதமர் வெளியிட்ட தகவல்

தங்கம் வாங்க காத்திருப்போருக்கு வெளிவந்த மகிழ்ச்சியான செய்தி

தங்கம் வாங்க காத்திருப்போருக்கு வெளிவந்த மகிழ்ச்சியான செய்தி