மசாஜ் நிலையத்திற்குள் நுழைந்து இளம் பெண்கள் கடத்தல்! இலங்கையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

150shares

ஹபரணை – மீகஸ்வெவ பகுதியில் இயங்கும் மசாஜ் நிலையமொன்றில் பெண்கள் இருவரை கடத்திச்சென்ற சம்பவம் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வலான குற்றத்தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் என தம்மை அடையாளப்படுத்திக் கொண்டவர்களே இந்த செயலில் ஈடுபட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

சந்தேகநபர்களினால் பயன்படுத்தப்பட்ட பொலிஸ் இலட்சனை, நீலநிற தொப்பி, பொலிஸார் என குறிப்பிடப்பட்ட அடையாள அட்டை மற்றும் ஜீப் வண்டியொன்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 30, 39 மற்றும் 55 வயதுடைய குருணாகல், திருகோணமலை மற்றும் புத்தளத்தைச் சேர்ந்தவர்களாவர்.

வலான குற்றத்தடுப்புப் பிரிவு அதிகாரிகள் என தெரிவித்து இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் தொடர்பில் தகவல் கிடைத்தால் அதனை உறுதிப்படுத்துவதற்கு வலான குற்றத்தடுப்புப் பிரிவின் 038 – 2234314 என்ற இலக்கத்திற்கு அழைக்குமாறு பொலிஸார் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளனர்.

you may like this

இதையும் தவறாமல் படிங்க
கோபத்தின் உச்சம்! கிளிநொச்சியில் ஆலயத்தை இடித்து அழித்த உரிமையாளர்- காரணம் என்ன?

கோபத்தின் உச்சம்! கிளிநொச்சியில் ஆலயத்தை இடித்து அழித்த உரிமையாளர்- காரணம் என்ன?

இந்தியா திண்டாடுகிறது: மோடியின் திட்டம் படு முட்டாள் தனமானது! ஒரே போடாகப் போட்டார் சுப்ரமணியன் சுவாமி

இந்தியா திண்டாடுகிறது: மோடியின் திட்டம் படு முட்டாள் தனமானது! ஒரே போடாகப் போட்டார் சுப்ரமணியன் சுவாமி

உலகத் தமிழரை தலை நிமிரச் செய்த தமிழன்! அமெரிக்காவில் தலைமை நீதிபதியாக நியமனம்

உலகத் தமிழரை தலை நிமிரச் செய்த தமிழன்! அமெரிக்காவில் தலைமை நீதிபதியாக நியமனம்

loading...