அதிகாலையில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூடு! யுவதி பலி- தாயார் படுகாயம்

97shares

வரக்காபொல- தொரவக்க பகுதியில் இனந்தெரியாத நபரினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் அவரது தாயார் படுகாயமடைந்துள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

இன்று அதிகாலை இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் 22 வயதுடைய யுவதியே உயிரிழந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

இத்துப்பாக்கிப் பிரயோகத்தின் போது மகள் உயிரிழந்துள்ள நிலையில், அவரது தாயார் படுகாயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.


you may like this

இதையும் தவறாமல் படிங்க
loading...