சிங்கப்பூர் பயணமானார் ரணில்!

27shares

முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இரண்டு நாள் பயணமாக சிங்கப்பூர் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தனிப்பட்ட பயணமாக அவர் நேற்றைய தினம் புறப்பட்டுச் சென்றுள்ளார் என அவரை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.

நேற்றைய தினம் 13ஆம் திகதி சென்றுள்ள அவர் நாளை (15) மீண்டும் நாடு திரும்பவுள்ளதாக கூறப்படுகின்றது.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பதவி குறித்து தீர்மானிக்க நாளை மறுதினம் வியாழக்கிழமை நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டமும், கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டமும் இடம்பெறவுள்ள நிலையில் ரணிலின் இந்தப் பயணம் அமைந்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க
loading...