முச்சக்கர வண்டியை மோதித் தள்ளிய இராணுவ வாகனம்!

22shares

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏ9வீதி பனிக்கன்குளம் சந்திப்பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்து மாங்குளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஏ9 வீதி பனிக்கன்குளம் சந்திப்பகுதியில் மாங்குள திசை நோக்கி சென்ற முச்சக்கரவண்டி ஒன்று பனிக்கன்குளம் சந்தியில் இருக்கின்ற கடைக்கு திரும்ப முற்பட்டவேளை கிளிநொச்சி நோக்கி சென்றுகொண்டிருந்த இராணுவத்தினரின் பிக்கப் வாகனம் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இவ் விபத்தின்போது முச்சக்கர வண்டியின் சாரதி படுகாயமடைந்த நிலையில், முச்சக்கர வண்டி தூக்கி வீசப்பட்டு அருகிலிருந்த மரத்துடன் மோதுண்டு பலத்த சேதத்துக்கு உள்ளாகியுள்ளது.

இதன்போது படுகாயமடைந்த முச்சக்கரவண்டி சாரதி மாங்குளம் ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் சம்பவ இடத்திற்கு வருகை தந்த மாங்குளம் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, இரண்டு தினங்களுக்கு முன்னர் முல்லைத்தீவு வட்டுவாகல் பகுதியிலும் இராணுவத்தினரின் வாகனம் மோதி இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க
loading...