எந்தவொரு புலனாய்வு அதிகாரிகளும் விடுதலை செய்யப்படவில்லை! மறுத்தார் மகிந்த

54shares

அண்மையில் 34 புலனாய்வு அதிகாரிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக வெளியான செய்தியில் உண்மையில்லை என பிரதமர் மகிந்த ராஜபக்ச மறுத்துள்ளார்.

தமிழ் ஊடக நிறுவனங்களின் பிரதானிகளுடனான சந்திப்பு அலரி மாளிகையில் இன்று காலை இடம்பெற்றது.

இதன்போது கலந்துரையாடிய பிரதமர்,

கடந்த பௌர்ணமி தினத்தன்று 34 புலனாய்வு அதிகாரிகள் விடுவிக்கப்பட்டுள்ளனரென சமூக ஊடகங்களில் வெளியாகியிருந்த செய்திகள் தொடர்பில், கருத்து வெளியிட்டிருந்த அவர், 34 புலனாய்வு அதிகாரிகள் விடுவிக்கப்பட்டுள்ளனரென வெளியான தகவல்களில் உண்மையில்லை என்று மறுத்துள்ளார்.

இதேவேளை, அரசியல் கைதிகளை விடுவிக்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

இதற்காக சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளின் பெயர் விபரங்கள் குறித்த தகவல்கள் கோரப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அவர்களில் பலர் மீது பாரதூரமான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் இதன்போது எடுத்துக்கூறியுள்ளார்.

எனினும் அவர்களின் விடுதலை தொடர்பாக தொடர்ந்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் பதிலளித்துள்ளார்.

இதையும் தவறாமல் படிங்க
இலங்கையை சேர்ந்தவரின் நிறுவனத்தில் பணிபுரிந்த தமிழ் பெண்களுக்கு நேர்ந்த அவலம்

இலங்கையை சேர்ந்தவரின் நிறுவனத்தில் பணிபுரிந்த தமிழ் பெண்களுக்கு நேர்ந்த அவலம்

விமான நிலையம் திறப்பு தொடர்பில் பிரதமர் வெளியிட்ட தகவல்

விமான நிலையம் திறப்பு தொடர்பில் பிரதமர் வெளியிட்ட தகவல்

பாலியல் லஞ்சம்! இரவு வேளையில் கைது செய்யப்பட்ட கிராம சேவகர்

பாலியல் லஞ்சம்! இரவு வேளையில் கைது செய்யப்பட்ட கிராம சேவகர்