சர்வதேசத்தின் கண்காணிப்பில் ஸ்ரீலங்கா விவகாரம்! சுமந்திரன் தகவல்

105shares

தற்போது இலங்கை தொடர்பான பிரேரணை அமுலாக்கத்தை சர்வதேசம் வெகுவாக கண்காணித்துக்கொண்டிருக்கின்றது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், அக்கட்சியின் ஊடகப் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

பிரிட்டனின் வெளிவிவகார மற்றும் பொதுநலவாய அலுவலகத்தின் தெற்காசிய பிராந்தியத்திற்கான பணிப்பாளர் கரேத் பெய்லியை நேற்றைய தினம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் மற்றும் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் ஆகியோரை கொழும்பில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தனர்.

இலங்கைக்கான பிரிட்டிஷ் உயர் ஸ்தானிகரின் இல்லத்தில் நேற்று முற்பகல் 11 மணி முதல் 12 மணிவரை நடைபெற்ற இந்த சந்திப்பில் ஜெனிவா பிரேரணை மற்றும் அதன் அமுலாக்கம் தமிழ் மக்களின் எதிர்பார்ப்பு அவர்களின் அபிலாஷைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக விரிவாக பேச்சு நடத்தப்பட்டதாக கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன்,

“இந்த சந்திப்பு மிகவும் ஆக்கப்பூர்வமாக அமைந்தது. ஜெனிவா பிரேரணை விவகாரம் தொடர்பான அடுத்த கட்ட நடவடிக்கைகளை ஆராயவே பிரிட்டிஷ் பிரதிநிதி இலங்கை வந்திருக்கின்றார். தற்போது இலங்கை தொடர்பான பிரேரணை அமுலாக்கத்தை சர்வதேசம் வெகுவாக கண்காணித்துக்கொண்டிருக்கின்றது.

இலங்கை தொடர்பான விவகாரத்தை ஜெனிவாவில் பிரிட்டன் மற்றும் ஜேர்மன் ஆகிய நாடுகளே தலைமைதாங்கி நடத்திக்கொண்டிருக்கின்றன. இந்தநிலையில் பிரிட்டன் பிரதிநிதியின் இலங்கை விஜயம் முக்கியத்துவமிக்கதாக அமைந்துள்ளது.

நாம் எமது நிலைப்பாட்டை மிகத் தெளிவாக எடுத்துரைத்திருக்கின்றோம். அதாவது 30/1 என்ற பிரேரணை முழுமையாக தாமதமின்றி அமுல்படுத்தவேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும். அதனை நாங்கள் திட்டவட்டமாக பிரிட்டனிடம் அறிவித்திருக்கின்றோம்.

அதேபோன்று சர்வதேச நாடுகளுடனும் ஐ.நா. மனித உரிமை பேரவையின் உறுப்பு நாடுகளுடனும் இந்த விடயம் தொடர்பில் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தவும் தயாராகவும் இருக்கின்றோம் என்பதனையும் தெளிவாக குறிப்பிட்டுள்ளோம்” என்றார்.


you may like this

இதையும் தவறாமல் படிங்க
இங்கிலாந்து பிரதமர் விடுத்துள்ள எச்சரிக்கை - ஊரடங்கை அமுல்படுத்தவும் திட்டம்

இங்கிலாந்து பிரதமர் விடுத்துள்ள எச்சரிக்கை - ஊரடங்கை அமுல்படுத்தவும் திட்டம்

உயிர்த்தஞாயிறு தாக்குதல் -மைத்திரியின் பேரம் அம்பலம்

உயிர்த்தஞாயிறு தாக்குதல் -மைத்திரியின் பேரம் அம்பலம்

வெளியேறிய  ரணில் மற்றும் சுமந்திரன்!

வெளியேறிய ரணில் மற்றும் சுமந்திரன்!