வீடு திரும்பிய வெள்ளைவான் சர்ச்சைக்குரிய முன்னாள் அமைச்சருக்கு நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவு!

30shares

கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன, சிகிச்சைகளின் பின் நேற்று இரவு வீடு திரும்பியுள்ளார். வெள்ளைவான் சாரதிகள் என்று இருவரை ஊடக சந்திப்பில் அறிமுகப்படுத்தி சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் கைது செய்யப்பட்டதை அடுத்து கடந்த மூன்று வாரங்களாக சிகிச்சைப் பெற்றுவந்த நிலையிலேயே அவர் நேற்று மருத்துவமனையிலிருந்து வெளியேறியிருக்கின்றார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

மைத்திரி-ரணில் தலைமையிலான நல்லாட்சி அரசாங்கத்தில் சுகாதார அமைச்சராகப் பதவிவகித்த ராஜித சேனாரத்ன ஜனாதிபதி தேர்தலுக்கு 05 தினங்களுக்கு முன்னர் நவம்பர் 11ஆம் திகதி கொழும்பில் ஊடக சந்திப்பொன்றை நடத்தியிருந்தார்.

அதில், தற்போதைய அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச, பாதுகாப்புச் செயலாளராக பதவிவகித்த காலப்பகுதியில் வெள்ளை வான் கடத்தல்களை செய்ததாகவும், அதற்கான உத்தரவுகளை அவர் வழங்கியமைக்கு இணங்க, 300க்கும் மேற்பட்டவர்களைக் கடத்தி கொலை செய்து முதலைகள் இருக்கும் குளங்களில் எறிந்ததாகவும் இந்த ஊடக சந்திப்பில் கலந்துகொண்டிருந்த இருவர் பரபரப்புத் தகவலை வெளியிட்டிருந்தனர்.

தங்களை வெள்ளைவான் சாரதிகள் என்றும் அவர்கள் அடையாளப்படுத்தியிருந்தனர். எனினும் ஆட்சிமாற்றத்தை அடுத்து இதுகுறித்த விசாரணை ஆரம்பிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட இருவர் கைது செய்யப்பட்டதோடு அவர்களின் வாக்கு மூலத்திற்கமைய முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை கைது செய்ய குற்றப் புலனாய்வுப் பிரிவு நடவடிக்கை எடுத்தது.

இதனிடையே டிசம்பர் 26ஆம் திகதி முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன, கொழும்பிலுள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். இருந்த போதிலும் அவருக்கெதிராக நீதிமன்றில் வழக்கு விசாரணை செய்யப்பட்டு விளக்கமறியல் உத்தரவும் பிறப்பிக்கப்பட்ட போதிலும் பிணை அனுமதியும் வழங்கப்பட்டது.

எவ்வாறாயினும் அந்தப் பிணை அனுமதிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மீளாய்வு மனுவை நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொண்ட கொழும்பு மேல் நீதிமன்றம், எதிர்வரும் 17ஆம் திகதி மன்றில் முன்னிலையாகுமாறு முன்னாள் அமைச்சர் ராஜிதவுக்கு உத்தரவிட்டது.

இவ்வாறான பின்னணியிலேயே முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன, சிகிச்சைகள் முடிந்த பின்னர் நேற்று இரவு மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியிருக்கின்றார்.

இதையும் தவறாமல் படிங்க
இங்கிலாந்து பிரதமர் விடுத்துள்ள எச்சரிக்கை - ஊரடங்கை அமுல்படுத்தவும் திட்டம்

இங்கிலாந்து பிரதமர் விடுத்துள்ள எச்சரிக்கை - ஊரடங்கை அமுல்படுத்தவும் திட்டம்

உயிர்த்தஞாயிறு தாக்குதல் -மைத்திரியின் பேரம் அம்பலம்

உயிர்த்தஞாயிறு தாக்குதல் -மைத்திரியின் பேரம் அம்பலம்

நான் ஒருபோதும் அப்படி கூறவே இல்லை -பல்டியடித்தாரா அமைச்சர்?

நான் ஒருபோதும் அப்படி கூறவே இல்லை -பல்டியடித்தாரா அமைச்சர்?