திருமந்திரத்திற்கு உயிர் கொடுக்க எல்லாத் தளங்களிலும் முன்வருவோம்! தவத்திரு அகத்தியர் அடிகளார்

20shares

நாம் அனைவரும் இணைந்து உழவுத் தொழிலை முன்னெடுப்பது போன்று நாம் அனைவரும் ஒரு தாய் பிள்ளைகளாக ஒற்றுமை உணர்வோடு எம்மிடையே எந்த ஏற்றத்தாழ்வுகளுக்கும் இடம் கொடாமல் "ஒன்றே குலம் ஒருவனே தேவன்" என்ற சைவத் தமிழ் மகா மந்திரமான திருமந்திரத்திற்கு உயிர் கொடுக்க எல்லாத் தளங்களிலும் முன் வருவோம் என தென்கயிலை ஆதீனம் தவத்திரு அகத்தியர் அடிகளார் தெரிவித்துள்ளார்.

தமிழர் திருநாளான தைத் திருநாள் வாழ்த்துச் செய்தியை வெளியிட்டுள்ள அவர், இது தொடர்பில் குறிப்பிட்டுள்ளதாவது,

“பிறக்கின்ற தைத்திருநாள் எமது மனங்களில் உண்மையான அன்பையும் சமத்துவத்துவத்தையும் மகிழ்வையும் கொண்டு வரட்டும்.

உலக சக்தி முதலாகவும் உழவின் உற்பத்தி கர்த்தாவாகவும் உள்ள சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் திருநாளான தைப்பொங்கல் தமிழர்களுடைய உன்னத பண்பை எடுத்தியம்பும் இனிய பண்டிகை ஆகும்.

உலக ஒழுக்கில் 2020 பிறந்திருக்கின்ற தருணம் அதற்கு இணையாக தமிழர் ஆண்டான திருவள்ளுவர் ஆண்டு 2051 ஆண்டில் தைத்திங்கள் பிறக்கின்றது.

நாம் அனைவரும் இணைந்து உழவுத் தொழிலை முன்னெடுப்பது போன்று நாம் அனைவரும் ஒரு தாய் பிள்ளைகளாக ஒற்றுமை உணர்வோடு எம்மிடையே எந்த ஏற்றத்தாழ்வுகளுக்கும் இடம் கொடாமல் "ஒன்றே குலம் ஒருவனே தேவன்" என்ற சைவத் தமிழ் மகா மந்திரமான திருமந்திரத்திற்கு உயிர் கொடுக்க எல்லாத் தளங்களிலும் முன் வருவோம்.

குரியனை மட்டுமன்றி பசு காளை இனங்களிற்கும் நன்றி தெரிவித்து பொங்கலிடும் நாம் அவற்றிற்கு மிகப் பெரும் வேதனையை அளிக்கும் குறி சுடுதல், நலமடித்தல் போன்ற செயற்பாடுகளை முற்றாக இங்கும் தாய் தமிழகம் போன்று கைவிடுவோம்.

சைவத்தினாலும் தமிழ் பண்பாட்டினாலும் செழுமை பெற்ற இத் திருநாள் மதம் கடந்து இன்று எல்லாத் தமிழர்களாலும் கொண்டாடப்படுவது மனத்திற்கு நிறைவை தருகின்றது.

நாம் அனைவரும் அன்பே சிவம் என்பதன் தார்பரியம் உணர்ந்து அனைவரும் இன்புற்று வாழும் வண்ணம் எம் செயற்பாடுகளை முன்னெடுக்க இத்தைத் திருநாளில் உறுதி ஏற்போம்.

அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்களை வழங்கி, இறை சிவன் எல்லா நலமும் நல்க திருக்கைலாய மரபு தென்கைலை ஆதீனம் சார்பாக பிரார்த்தித்து அமைகின்றோம்.” என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் தவறாமல் படிங்க
இங்கிலாந்து பிரதமர் விடுத்துள்ள எச்சரிக்கை - ஊரடங்கை அமுல்படுத்தவும் திட்டம்

இங்கிலாந்து பிரதமர் விடுத்துள்ள எச்சரிக்கை - ஊரடங்கை அமுல்படுத்தவும் திட்டம்

உயிர்த்தஞாயிறு தாக்குதல் -மைத்திரியின் பேரம் அம்பலம்

உயிர்த்தஞாயிறு தாக்குதல் -மைத்திரியின் பேரம் அம்பலம்

வெளியேறிய  ரணில் மற்றும் சுமந்திரன்!

வெளியேறிய ரணில் மற்றும் சுமந்திரன்!